மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ளது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான  புகழ்பெற்ற  அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில். தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். 



திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்


கேரளா: சபரிமலையில் பிரசாதம் மற்றும் பூஜைக்கான கட்டணங்கள் அதிரடி உயர்வு


இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் கடந்த மாதம் மார்ச் 27 ம் தேதி 25 ஆண்டுகளுக்கு பின்னர் மகா குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றால் பக்தர்கள் இன்று நடைபெற்றுவந்த சித்திரைத் திருவிழா இந்தாண்டு பக்தர்கள் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதனையடுத்து  சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. 


IPL 2022 Memes: “வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா..” சென்னை, மும்பை ரசிகர்களை ஓடவிடும் ஐபிஎல் மீம்ஸ்




ஆண்டு தோறும் 14 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று விநாயகர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர், சுவாமி, அம்பாள், காலசம்ஹாரமூர்த்தி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, கொடி மரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மிருகசீரிஷ நட்சத்திரத்தில் காலை 10 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் சித்திரை திருவிழாவிற்கான பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது.




Watch Video: பரீட்சை அட்டைக்குள் திரையில் ஓடிய வாட்ஸ் அப்.. நூதனமாக காப்பி அடித்த பள்ளி மாணவன்!


தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள்  முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கடையூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை திருக்கல்யாணமும், ஏப்ரல் 11 ஆம் தேதி சகோபுர வீதி உலாவும், ஏப்ரல் 12 ஆம் தேதி  இரவு எமன் சம்ஹாரமும், ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேரோட்டமும், ஏப்ரல் 16 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.