பொதுத்தேர்வுகளில் காப்பி அடிப்பது என்பது தேர்வு கண்டிபிடித்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அதனைத் தடுக்க பறக்கும் படையெல்லாம் பின்நாட்களில் அமைக்கப்பட்டது. ஆனாலும் ஒவ்வொரு வருடமும் சில மாணவர்கள் இப்படியான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிக்குவது வழக்கம். விடைகளை பார்த்து எழுவதற்காக பல வேலைகளையும் செய்யும் மாணவர்கள் இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
செல்போனை மறைத்து கொண்டு செல்வது, ப்ளூடுத் ஹெட்போன் பயன்படுத்துவது போன்ற பல நூதன வேலைகளை மாணவர்கள் செய்து சிக்குகின்றனர். அந்த வரிசையில் ஹரியானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
9 மனைவி.. 1 விவாகரத்து.. இன்னும் 2 பெண்ணுக்கு வெயிட்டிங்.. மாடலின் விநோத திருமணங்கள்..
க்ளிப் போர்டும்.. வாட்ஸ் அப்பும்..
ஹரியானா மாநிலத்தில் உள்ள பதேஹாபாத்தின் புத்தன்காலா கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் கண்ணாடியிலான தேர்வு அட்டையை பயன்படுத்தியுள்ளார். அந்த தேர்வு அட்டையின் நடுவில் செல்போனை மறைத்து வைத்து அதில் வாட்ஸ் அப்பை ரெடியாக வைத்திருந்துள்ளார். மெதுவாக ஸ்கிரால்செய்து விடைகளை எல்லாம் பார்த்து பொறுமையாக எழுதிக்கொண்டு இருந்த அந்த மாணவன் பறக்கும் படையால் பிடிபட்டுள்ளார்.
திடீரென தேர்வு அறைக்குள் நுழைந்த பறக்கும் படையினர் வாட்ஸ் அப் மாணவனின் தேர்வு அட்டையை சோதனை செய்துள்ளனர். அதில் செல்போன் இருந்ததால் அவர் சிக்கினார். இதனை அடுத்து தேர்வு அறையில் இருந்து வெளியேற்றபட்ட மாணவன் மீது பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்