கேரளா: சபரிமலையில் பிரசாதம் மற்றும் பூஜைக்கான கட்டணங்கள் அதிரடி உயர்வு
உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சிறப்பு பூஜைகளுக்காக வரும் 10-ஆம் தேதி முதல் நடை திறக்கபடுவதையொட்டி பிரசாதம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
Continues below advertisement

சபரிமலை தேவசம்போர்டு
தமிழ் மாதத்தின் சித்திரை மாதம் மலையாள மாதத்தின் மேடம் மாத "விஷு" சிறப்பு பூஜைகளுக்காக வரும் ஏப்ரல் 10ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சபரிமலையில் பிரசாதம் மற்றும் சிறப்பு பூஜைக்கான கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் அன்று அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
Continues below advertisement
Just In

TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?

இந்திய கடற்படையில் புதிய சாதனை! 'நிஸ்டார்' டைவிங் கப்பல்: ஆழ்கடல் மீட்பில் இந்தியாவின் அடுத்த கட்டம்!

வரும் 23ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

கண்குளிர, மனம் குளிர பண அலங்காரத்தில் அருள்பாலித்த அரியலூர் பெரியநாயகி அம்மன்
Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டம் நாளை மின் நிறுத்தம் - எங்கன்னு தெரியனுமா? விபரம் உள்ளே....!
விழுப்புரம், திருக்கோவிலுார், செஞ்சி பகுதிகளில் மின் தடை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசாதம் சிறப்பு பூஜைக்கான உயர்த்தப்பப்ப கட்டணங்கள் விபரம்:
ரூ.1,15,000 இருந்த படி பூஜை கட்டணம் படி பூஜை ரூ.1,37,900 ஆகவும் ரூ.80 ஆயிரமாக இருந்த சகஸ்ரகலசம் பூஜை கட்டணம் 91,250 ரூபாயாகவும் 50,000 ஆயிரம் ரூபாயாக இருந்த உதயாஸ்தமன பூஜை ரூ61,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் 30 ஆயிரம் ரூபாயாக இருந்த உற்சவபலி பூஜை கட்டணம் ரூ. 37,500 ரூபாயாகவும் 22,500 ரூபாயாக இருந்த. களபாபிஷேகம் பூஜை கட்டணம் ரூ.38,400 ஆகவும் 10,000 ரூபாயாக இருந்த தங்க அங்கி சார்த்துதல், பூஜை கட்டணம்ரூ.15,000 ரூபாயாகவும் , அதே 10,000 ரூபாயாக இருந்த புஷ்பாபிஷேகம், சதகலசம் பூஜை கட்டணங்கள் முறையே ரூ.12,500 அகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
அதேபோல் 5 ஆயிரம் ரூபாயாக இருந்த அஷ்டாபிஷேகம் ரூ.6,000 ஆகவும், 2,500 ரூபாயாக இருந்த உச்ச பூஜை ரூ.3,000 ஆகவும், 2 ஆயிரம் ரூபாயாக இருந்த பகவதி சேவை ரூ.2,500 ஆகவும், ஆயிரம் ரூபாயாக இருந்த உஷ பூஜை கட்டணம் ரூ.1,500 ஆகவும், 300 ரூபாயாக இருந்த கணபதி ஹோமம் ரூ.375 ஆகவும், 250 ரூபாயாக இருந்த.கெட்டு நிறைத்தல் கட்டணம்.ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரசாதங்களை எடுத்துக் கொண்டால் 75 ரூபாயாக இருந்த 100 மி.லி., அபிஷேக நெய் 100 ரூபாயாகவும், 100 ரூபாயாக இருந்த நீராஞ்சனம் ரூ.125 ஆகவும், 80 ரூபாயாக இருந்த அரவணை ரூ.100 ஆகவும், 35 ரூபாயாக இருந்த ஒரு பாக்கெட் அப்பம் ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில் 18-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். 15-ந் தேதி விஷு பண்டிகை விழா நடக்கிறது.
கேரளாவின் கட்டுப்பாட்டில் மங்கலதேவி கண்ணகி கோயில் - தமிழகம் சாலை அமைக்க வலுக்கும் கோரிக்கை
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.