மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் முருகனின் சகோதரிகள் கவிதா, கீதா ஆகியோர் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் இருந்து குடும்பத்தினருடன் முருகனின் வீட்டிற்று வந்துள்ளனர். இந்நிலையில் முருகனின் 11 வயது மகன் யுகேந்திரன். முருகன் சகோதரிகளின் மகன்கள் 12 வயதான பிரதீஷ் மற்றும் 7 வயதான மோகித் ஆகியோர் வீட்டின் அறையில் கடந்த ஆண்டு வாங்கிய வெடிக்காமல் வைத்திருத்த பட்டாசு பாக்ஸ் திறந்து பார்த்துள்ளனர்.
அதனைத் வெடிப்பதற்காக மூன்று பேரும் ஊதுபத்தி மற்றும் மெழுகுவத்தி ஏற்றும் போது தவறுதலாக தீ பட்டாசில் பட்டுள்ளது. பின்னர் எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அறையில் இருந்த துணிகள் தலையனைகள் தீப்பிடித்தது. உடனடியாக தீயை அனைத்த உறவினர்கள் 3 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு வெடித்து 3 சிறுவர்கள் படுகாயமடைந்தது அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது நிச்சயம் பெரியவர்கள் ஒருவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் இல்லை எனில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களுக்கு ஆளாக நேரிடும் என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் 65 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தரைப்பாலம் இடிந்து சேதமடைந்ததை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை லால்பகதூர் நகரில் உள்ள கற்பக விநாயகர் கோயில் அருகில் பூம்புகார் சாலை மற்றும் தருமபுரம் சாலையை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1954 -ஆம் ஆண்டு நடைபாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலம் ஒருதலைராகம் திரைப்படத்தில் வரும் 'இது குழந்தை பாடும் தாலாட்டு" திரைப்பாடல் படமாக்கப்பட்ட நடைபாலமாகும்.
பழமையான இந்த பாலத்தை மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி, தருமபுரம் கலைக்கல்லூரி, ஏவிசி கல்லூரி மற்றும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்துள்ளது. தற்போது ஆபத்தான நிலையில் உள்ள பழைமையும், பிரசித்தியும் பெற்ற இந்த நடைபாலத்தை, உடனடியாக சீரமைத்து, புதுப்பித்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.