சமீப காலமாக மக்களால் பெரிதும் பாராட்டப்படும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம், மாஸ்டர் போன்று சமீபத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.


லோகேஷ் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கைதி மற்றும் விக்ரம் திரைப்படம் தான் என்னுடைய யூனிவர்சில் இருக்கிறது மாஸ்டர் திரைப்படம் ஒரு தனி திரைப்படம் தான் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது அமேசான் பிரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் இறுதி காற்றை பதிவிட்டு ”சில நேரங்களில் முடிவும் ஒரு ஆரம்பம்தான்” என கேப்ஷன் அளித்துள்ளது.


 






இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் லோகேஷின் யுனிவர்சல் மாஸ்டரும் இணைய உள்ளதா என்று ஆவலோடு காத்திருக்கின்றனர். நடிகர் விஜய்யின் 67 ஆவது படத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த திரைப்படத்தை பற்றி பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் விஜய்யின் 67 வது படம் 2005ல் வெளியான ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் என்று பல செய்திகள் வெளியாகி உள்ளன.


இதைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படமும் நடிகர் விஜய்யின் 67வது திரைப்படமாக துவங்கவிருக்கும் திரைப்படமும் ஒரு புது யுனிவர்சாக உருவாகுமா என்று ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பி உள்ளது இந்த பதிவு.


 






ஒவ்வொரு நேர்காணலின் போதும் லோகேஷ் கனகராஜிடம் கைதி மற்றும் விக்ரம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படமும் இந்த யுனிவர்சுடன் இணைந்தால் ஏற்கனவே கமல் ,சூர்யா, கார்த்தி ,விஜய் சேதுபதி என நடிகர் பட்டாளமே இருக்கும் அந்த யுனிவர்சில் விஜய்யும் இணைய உள்ளாரா என்று ஆர்வத்தில் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் தான் பதில் அளிக்க வேண்டும்.


நடிகர் விஜய்யின் 66வது திரைப்படமான வாரிசு திரைப்படத்திற்கு ஏற்கனவே பல எதிர்பார்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன, இதைத்தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜன் ரசிகர்களும் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.