தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை அரசு கால்நடை பண்ணையில் உள்ள கால்நடைகள் வரும் 18ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


கால்நடைகள்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 18 கால்நடைகள் வரும் 18ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் அரசு விதிமுறைகளின் படி பகிரங்கமாக துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது. 


ஜெர்சி பொலி காளைகள் ஏலம்


இதில் ஜெர்சி பொலி காளைகள் 5, திருச்சி கலப்பின பொலி காளை 19, முர்ரா வகை மாடு 2 என மொத்தம் 26 கால்நடைகள் ஏலம் இடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் தனித்தனியாக முன் வைப்பு தொகை 20 ஆயிரத்தை கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர், மாவட்ட கால்நடை உயிரின பெருக்குபண்ணை, ஈச்சங்கோட்டை. என்ற பெயரில் வங்கி வரைவோலையாக தஞ்சையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் மாற்றத்தக்க வகையில் எடுத்து வர வேண்டும்.


ஒரு நபரிடமிருந்து ஒரு வங்கி வரைவோலை


ஒரு நபரிடமிருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் ஏலம் நடத்தப்படும். வைப்புத் தொகையாக செலுத்தப்படும் வங்கி வரைவோலைகள் அனைத்தும் வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை பெறப்பட்ட வங்கி வரைவோலையாக இருக்க வேண்டும். இதற்குப் பிந்தைய அல்லது முந்தைய தேதியில் பெறப்பட்ட வரைவோலைகள் ஏற்கப்பட மாட்டாது. ஏலத்தில் வங்கி வரைவோலைகளை கொடுத்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  


வைப்புத் தொகை திருப்பி வழங்கப்படும்


கால்நடை ஏலம் எடுத்தவர் முழு ஏல தொகைகளும் செலுத்திய பின்னரே அடுத்த ஏலம் கோர அனுமதிக்கப்படுவர். ஏலம் முடிந்தவுடன் அதிக தொகைக்கு ஏலம் கோரிய வரை தவிர இதர நபர்களுக்கு வைப்புத்தொகை வங்கி வரை வேலை திருப்பி வழங்கப்படும். ஏலம் முடிந்தவுடன் முழுத் தொகையும் உடனே செலுத்தி கால்நடைகளை அன்றே எடுத்துச் செல்ல வேண்டும். ஏலம் விடப்படும் கால்நடைகளை பண்ணையில் உள்ள கால்நடை பிரிவு  உதவி டாக்டர்களை அணுகி அனுமதி பெற்று பார்வையிடலாம்.


ஏலத்தை தள்ளி வைக்க அதிகாரம் உண்டு


ஏலம் கேட்ட தொகை அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக இருப்பின் அல்லது நிர்வாக காரணங்களால் ஏலம் தடை பட்டாலும் ஏலத்தை தள்ளி வைக்கவும் ரத்து செய்யவும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு. மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இந்த பொது ஏலத்தில் பங்கு பெற அனுமதி இல்லை. ஏலத்தில் வங்கி வரைவோலைகளை கொடுத்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குடிபோதையில் இருப்பவர்கள் ஏலத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள அனுமதிக்க பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.