"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" இது பாரதியின் பாடல் இந்த பாடல் வரிகள் நடைமுறை படுத்தினால் இதுநாள் வரை இந்த உலகத்தினை எந்தனை முறை அழித்திருக்க வேண்டும் என எண்ண தோணும் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில், கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை  எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரானது கொள்ளிடம் ஆற்றில் திறந்துவைக்கப்பட்டது. கொள்ளிட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. கரையோர பகுதி கிராமங்கள் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.




இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஜெயம்கொண்டப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க வயதான முருகவேல் - அருள்செல்வி தம்பதியினரின் வீடு வெள்ளத்தில் முழுவதும் மூழ்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை படகு மூலம் மீட்டு வெளியேற்றியுள்ளனர். குழந்தைகள் யாரும் இல்லாத அந்த வயதான தம்பதியினர் தற்போது ஆதரவு ஏதும் இன்றி தங்க இடம் உண்ண உணவின்றி காலில் காயத்துடன் தவித்து வருகின்றனர்.




Kamal Haasan H Vinoth Film: கமலுடன் இணையும் ஹெச்.வினோத்.. இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


மேலும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த குளத்திங்கநல்லூர் கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இருந்த போதும் அங்குள்ள சில அவர்கள் பள்ளி, கிராம நிர்வாக அலுவலர், பேருந்து நிறுத்தம் என அரசு கட்டிடங்களில் அமர்ந்து இருப்பதை கண்டு அடித்து விரட்டுவதாகவும், சாப்பிட வழி இன்றி கடந்த 3 நாட்களாக மிகவும் பசியில் பாடுவதாக வேதனை தெரிவித்தனர்.  இருந்த போதும் அங்குள்ள இளைஞர்  ஒருவர் அவருக்கு உதவி உணவு வழங்கி இவர்களுக்கு அரசு உதவி வேண்டும் என வேண்டுகோள் சமூக வலைதளங்களில் வீடியோ வெயீட்டுள்ளார். தற்போது அந்த வயதான தம்பதியினர் வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை ஊராட்சி பகுதியில் வீடுவீடாக சென்று திமுகவினர் வினியோகம் செய்தனர்.


பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டில் மக்களிடையே ஒரு மொழியை பிரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற வகையில் இந்தி திணிப்புக்கு எதிராக அண்மையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில், அந்த தீர்மானத்தின் சாராம்சங்களை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை திமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் விநியோகம் செய்து வருகின்றனர். அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டமங்களம் ஊராட்சியில் திமுக மாவட்ட துணைசெயலாளர் செல்வமணி தலைமையில் திமுகவினர் வீடுவீடாக சென்றும் வணிக வளாகங்களிலும் இந்தி திணிப்பிற்கு எதிராக உள்ள வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்தினர்.


Watch Video: ஆறுதல் கூறுவதற்கு காரில் சீறிய பவன் கல்யாண்...வீடியோவால் சர்ச்சை...ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்...


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற