மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்காள மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் தனது சகோதரர் இல.கோபாலன் குடும்பத்துடன் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு வருகை புரிந்த ஆளுநர் இல.கணேசனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநர் இல.கணேசனுக்கு கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி சன்னதி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை ஆளுநர் இல்.கணேசன் தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுந்து வருவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? என்னை யாரும் திரும்ப பெற வேண்டுமென கூறவில்லை எனவும், தமிழக அரசியல் பற்றி இனி தான் படிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, திருவாரூரில் செய்தியாளரிடம் தான் தஞ்சாவூர்காரர் என கூறிய நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியான ஆளுநர் இல.கணேசன் தனக்கு தமிழக அரசியல் பற்றி தனக்கு தெரியாது என கூறியது அங்கு இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆளுநர் வருகையை ஒட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சீர்காழி,வைத்தீஸ்வரன்கோயிலில் ஜப்பான் நாட்டினர் கொரோனாவிலிருந்து விடபட வேண்டி வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் திருக்கோயில் உள்ளது இந்த கோயிலில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி, திருஞானசம்பந்தர் ஆகியோர் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றன. இந்த கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பால கும்ப குருமுனி என்கின்ற தக்கா யூகி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு நேரில் வந்து இந்து முறைப்படி சாமி தரிசனம் செய்தனர.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டியும் நோய் தீர்த்த ஸ்தலங்களில் வேண்டி வருகின்றனர். இவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது தொடர்ந்து சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் நவகிரக ஸ்தலமான செவ்வாய் கோயிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், தன்வந்திரி ஆகிய சந்ததிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் கோவில்களில் வந்து வழிபாடு செய்ததை அப்பகுதி மக்கள் ஆட்சியத்துடன் கண்டனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற