தஞ்சை சீதா நகரில் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சுவாமிநாதன் என்பவரது வீட்டில் கடந்த 10ஆம் தேதி 5 லட்சம் பணம் மற்றும் 6 சவரன் நகைகள் திருட்டு போனது. இக்கொலை தொடர்பாக சுவாமிநாதன் கும்பகோணம் மேற்கு காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேற்கு போலீசார் கடந்த 12ஆம் தேதி வழக்கு பதிவு செய்து அன்றைய தினமே, தனிப்படை அமைக்கப்பட்டது.  இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையில்  தனிப்படை எஸ்ஐ சந்திரசேகரன் மற்றும் டேவிட் மற்றும் போலீசார் தேடி வந்தனர்.



இந்நிலையில் தனிப்படை போலீசார் கடந்த 12 தேதி இரவு தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்குள் சந்தேகத்திற்கிடமாக படுத்து இருந்த சீர்காழி, தண்டன்குளம், புதுப்பட்டிணம் பழைய ரோட்டை சேர்ந்த சந்திரசேகரன் மகன் சேர்ந்த சத்தியவாணன் (32), சென்னையை சேர்ந்த அப்துல் மஜீத் (41), தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மூன்று பேரும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலைய பின்புறம் உள்ள ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை தொடங்கினார். அப்போது தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல், கடலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற 15 க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்பு உள்ள கைரேகையும், சத்தியவானனின்  கைரேகையும் ஒத்துப் போனது தெரியவந்தது.



இதனையடுத்து கடந்த 11 நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், 23 ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் சத்தியவாணன் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளார். நேற்று மதியம் சவக்கிடங்கில் உள்ள சத்தியவானனின் உடலை பிரேத ஆய்வு விசாரணை செய்வதற்காக தஞ்சை குற்றவியியல் நீதித்துறை நடுவர் முகம்மது அலி முன்பு, சத்தியவானனின் சகோதரி சண்முகபிரியா, இஸ்லாமியர்கள் அணியும் பர்தா அணிந்து கொண்டு தனது உறவினருடன், உடலை பார்வையிட்டு, தனது சகோதரன் தான் ஒப்புக்கொண்டார்.


பின்னர், அவரது உடலை உடற்கூறு செய்வதற்காக பலத்த போலீசார் பாதுகாப்புடன், எடுத்து செல்லப்பட்டது.  இன்று காலை கருப்பு கண்ணாடியுடன் இருக்கும் சுமோ காரில்  சத்தியவானனின் சகோதரி மற்றும் உறவினர்களை, பத்திரமாக போலீசார் பாதுகாப்பாகவும் மறைவான இடத்தில் நிறுத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து இன்று மதியம் சத்தயவானனின் உடல் உடல்கூறு செய்யப்பட்டு, பர்தா அணிந்து வந்த சகோதரி சண்முகபிரியா மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சத்தியவானனின் உடலானது பலத்த போலீசார் பாதுகாப்புடன் தஞ்சை ராஜகோரி இடகாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, புதைக்கப்பட்டது.


மேலும் சத்தியவானனை பற்றி  போலீசார் கூறுகையில்,


சத்தியவாணன், ஏழ்மை நிலையில் இருந்ததால், செலவிற்கு தேவையான பணத்திற்கு, சீர்காழியிலுள்ள ஒய்வு பெற்ற எஸ்.ஐயான மாமா வீட்டில் முதன் முதலாக பேட்டரியை திருடுகிறார், பின்னர் வயலிலுள்ள மின் மோட்டாரை திருடி விட்டு தலைமறைவாகி விடுகிறார். அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களில் பூட்டியுள்ள வீட்டை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் திருடி வெளி மாவட்டங்களுக்கு சென்று விடுவார்.



திருடிய நகை மற்றும் பணத்தை, குடிப்பதற்கும்,கஞ்சா அடிப்பதற்கும், பெண்களிடம் செல்வதற்காக திருடி வந்தான். மேலும் திருடிய நகை, பணத்தை சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளான். பணம் தீர்த்தவுடன் வீட்டில் திருடுவார்.  சுவாமிநாதன் வீட்டில் திருடிய பணத்தை, சென்னை சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். பின்னர் நகைகளை ஈரோட்டில் உள்ள நகைகடையில் அடகு வைத்து அதில் வரும் பணத்தையும் செலவழித்துள்ளார். பணம் தீர்ந்தவுடன், தஞ்சாவூருக்கு வரும் போது சிக்கி கொண்டார் என்றனர்.