மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா விசலூர் ஊராட்சியில் உள்ள பத்தம், விசலூர், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக பொதுவிநியோக ரேஷன் கடை சேந்தமங்கலம் கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் விசலூர் ஊராட்சி கிராமமக்கள் நீண்டநாள் கோரிக்கை ஏற்று 2019 -2020 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விசலூர் கிராமத்தில் பொதுவிநியோக கட்டிடம் கட்டப்பட்டது.  அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்ந சூழலில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் ஏற்கனவே இயங்கிய வாடகை கட்டிடத்திற்கு பொதுவிநியோக கடை மீண்டும் மாற்றப்பட்டது. 




இதனால் அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் இதனை கண்டித்து விசலூர், பத்தம் கிராம பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் சங்கரன்பந்தல் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் திடீரென சாலையில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய கட்டிடம் இருக்கும் போது வாடகை கட்டிடத்தில் ஏன் இயங்கவேண்டும்? உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் விசலூர் கிராமத்தில் கட்டப்பட்டு பூட்டி கிடக்கும் பொதுவிநியோக கடையை திறக்க வேண்டும் என அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் சாலைமறியல் ஈடுப்பட்டனர். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


Biggboss Tamil 5 : இங்கே சில குரூப்ஸ் இருக்கு.. அவங்க என்னைப் புறக்கணிக்கிறாங்க.. ஆதங்கப்படும் பாவனி..!


அதனையடுத்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தரங்கம்பாடி மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார் மறியலில் ஈடுபட் டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் பொதுவினியோக கடை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்களின் தீடீர் சாலைமறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் மயிலாடுதுறை - பொறையாறு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 70% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி - ஆய்வில் தகவல்


Nobel Prize 2021 in Economics: அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு