தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முசிறி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் சிவசக்தி வேல் (14) 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த  பூமிநாதன் மகன் கமலேஷ் (11)  6ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும், நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்தனர். மேலும் தற்போது பள்ளிகூடம் இல்லாததால், தினந்தோறும் வீட்டிலிருந்து, வெளியில் சென்று விளையாடுவதும், பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நண்பர்கள் இருவரும், அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில், மாலை நேரத்தில்,  நாவல் பழம் பறிக்க சென்றவர்கள், இரவாகியும் வீட்டிற்கு திரும்பாத நிலையில், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்,  இருவரையும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.


TN Local Body Election Results LIVE: நிற்கக் கூட இடமில்லை... தாம்பரத்தில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பூத் ஏஜெண்டுகள் கோஷம்!




இந்நிலையில், காலை சிவசக்திவேல் உடல்  ஏரியில் கரை ஒதுங்கிக் கிடந்தது. மேலும் மாயமான கமலேஷை, தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் ஏரி முழுவதும் தேடி,  அவரது உடலை மீட்டனர்.  மதுக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,


கடந்த சில நாட்களாக பெய்தபலத்த மழையினால், ஏரிக்கரையில், மழை நீர் அதிகமாக இருந்தது. மேலும் ஏரிக்கரையை சுற்றிலும் நாவல் பழம் அதிகமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும், நாவல் பழத்தை பறித்து சாப்பிட்டு வருவார்கள். இந்நிலையில் ஏரிக்கரையில் பெய்த மழையினால,தரைகள் அனைத்தும் மிகவும் மோசமாக இருந்துள்ளது. சிறுவர்கள் இருவரும், நாவல் பழத்தை பறித்து கொண்டு, மரத்திலிருந்து கீழே இறங்கினர். அப்போது ஒரு கையில் நாவல் பழமும், மறுகையை கொண்டு மரத்தை பிடித்து கொண்டு இறங்கும் போது, முதலில் ஒரு சிறுவன்,மரத்திலிருந்து ஏரிக்குள் விழுந்தான். இதனை மற்றொரு சிறுவன், அவரை பிடிப்பதற்காக முயன்ற போது, அவனும் ஏரிக்குள் விழுந்துள்ளான்.


உயரத்திலுள்ள மரத்திலிருந்து விழுந்ததால், உடல் எடை தாங்காமல் ஏரிக்குள் உள்ள மண்ணில் சிக்கினர். இதில் ஒரு சிறுவன் மேலோட்டமாக விழுந்ததால், இறந்த நிலையில் உடல் மிதந்ததால், மீட்கப்பட்டான். மற்றொரு சிறுவனை, ஏரிக்குள் விழுந்துள்ளானதையடுத்து தீயணைப்புதுறையினர் தேடி கண்டு  பிடித்தனர். பள்ளி கூடம் திறந்திருந்தால், அவர்கள் இறப்பதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். வீட்டிலுள்ளவர்கள்விவசாய பணிக்காகவோ, பல்வேறு வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருக்கும் நிலையில், சிறுவர்கள் வெளியில் சென்று வருவது தெரியாமல் போய் விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாப்பேட்டையில்,குளத்தில் முழ்கி இறந்து போன வடுக்கள் மாறாத நிலையில்,சிறுவர்கள் இருவரும் நிலை அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.


மதுரை: உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான வளரி வீரனின் நடுகல் கண்டெடுப்பு...!