புதிய நம்பர் பிளேட் விதி முறையின்படி வாகன நம்பர் பிளேட்டை வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக பெரும்பாலான வாகனகங்ளில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக உள்ளது. இந்த பிழையான நம்பர் பிளேட்டுகள் கொண்ட வாகனங்கள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும்போதும், விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் பொழுதும் அவற்றின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பிழையான நம்பர் பிளேட்டுகளை கொண்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சாலையோரங்களில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர். மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும். ஆனால் பலரும் தங்களது நம்பர் பிளேட்டில் ஆன்மிகம், அரசியல், சினிமா போன்றவற்றை மையப்படுத்தி நம்பர் பிளேட்டுகளை அமைத்து வருகின்றனர்.
அதிரடிக்கும் தஞ்சை போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் - நம்பர் பிளேட் சோதனை தீவிரம்
என்.நாகராஜன் | 24 Jan 2023 05:40 PM (IST)
மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும்.
வாகனச்சோதனையில் தஞ்சை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ஜி. ரவிச்சந்திரன்.
Published at: 24 Jan 2023 05:40 PM (IST)