மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் தேவார பாடல் பெற்ற  அதுல்ய குஜாம்பிகை உடனாகிய கோமுக்தீஸ்வரர் கோயில்  அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடைய திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான  கோமுக்தீஸ்வரர் கோயிலில்  திருஞானசம்பந்தர் தங்கி தரிசனம் செய்து வந்தபோது, அவரது தந்தை சிவபாத இருதயர் உலக நன்மைக்காக தான் ஏற்பாடு செய்திருந்த யாகத்திற்கு, திருஞானசம்பந்தரிடம் பொருளுதவி கேட்டு திருவாவடுதுறை வந்தார். 




இதனையடுத்து திருஞானசம்பந்தர், கோமுக்தீஸ்வரரை வேண்டி உலவாக்கிழி திருபதிகம் பாடி 1000 பொற்காசுகள் பெற்றதாக ஐதீகம். இந்த ஐதீக விழாவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் தை ரத சப்தமி பெருவிழாவின் 5 -ஆம் நாள் திருஞானசம்பத்திற்கு இறைவன் பொற்கிழி அளிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இக்கோயிலின் ரதசப்தமி பெருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 -ஆம் நாள் திருவிழாவான, திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளிக்கும் ஐதீக விழா நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகத்தை பாடினர். 


ஆன்லைனில் அபராதம் தவறாக விதிப்பதை முறைப்படுத்த வேண்டும் - சேலம் லாரி உரிமையாளர் சங்கம்




தொடர்ந்து சுவாமி சன்னதியில் இருந்து பூதகனம் பொற்கிழியை சுமந்து வந்து பீடத்தில் வைத்தது. இதனை அடுத்து திருஞானசம்பந்தருக்கு சுவாமி பொற்கிழி வழங்கும் ஐதீக நிகழ்வு திருவாவடுதுறை ஆதீனம் 24 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருமுறை இசை அறிஞர் 4 பேருக்கு தலா  5 ஆயிரம் ரூபாய் அடங்கிய பொற்கிழியை குரு மகா சன்னிதானம்  அளித்து ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சுவாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகாசன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.




மயிலாடுதுறை அருகே அகர கீரங்குடி ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழு தொழிலுக்கான கட்டடத்தை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் அகர கீரங்குடி ஊரட்சியில் 3.50 லட்சம் ரூபாய் செலவில் மகளிர் சுய உதவி குழு தொழிலுக்கான மெழுகுவர்த்தி விற்பனை கட்டிடம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் தலைமையில் நடைபெற்று. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு செயல்படுத்தி வருகிறார். அதை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் மேம்பட வேண்டுமென கேட்டுக்கொண்டனர். 


“தேவதையே வா... வா.. “ - கொண்டாடப்பட வேண்டிய தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று! காரணம் என்ன?


இதனைத் தொடர்ந்து வேளாண் துறை சார்பாக 600 -க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி, ஒன்றிய ஆணையர் அன்பரசன்,மாவட்ட பிரதிநிதி அசோகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.