தஞ்சாவூர்: தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஒரு கிலோ தக்காளியை பரிசாக வழங்கினார். தக்காளியை பரிசாக பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து சென்றனர்.


ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பலமுறை தஞ்சாவூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி பரிசாக அளிக்கப்பட்டது.


சாலை விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடிபட்டு தான் பலரும் உயிரிழக்க நேரிடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பை தடுத்திட ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட  போக்குவரத்து போலீசார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


ஹெல்மெட் வாகனம் ஓட்டுபவர்களை காயம் மற்றும் இறப்புகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஹெல்மெட்கள் கீழே விழுந்தால் பாறைகள் மற்றும் பிற பொருட்களால் தாக்கப்படாமல் தலையை பாதுகாக்கிறது.




ஹெல்மெட் என்பது பைக் ஓட்டும்போது நமக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களில் முக்கியமான ஒன்றாகும். விபத்து ஏற்பட்டாலோ அல்லது தரையில் அடிபட்டாலோ ஹெல்மெட் நம் தலையைப் பாதுகாக்கும். மூளையதிர்ச்சியைத் தடுப்பதற்கும் தலைக்கவசம் மிக முக்கியமானது. விபத்து காரணமாக மூளை பாதிப்பு அல்லது காயம் ஏற்படாமல் இருக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.


சைக்கிள் ஓட்டுதல், கால்பந்து, பேஸ்பால், குதிரை சவாரி, ஐஸ் ஹாக்கி, ரக்பி, ஸ்கேட்போர்டிங் மற்றும் பனிச்சறுக்கு உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கும் ஹெல்மெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தடகள வீரர் உயரத்தில் இருந்து அல்லது தரையில் இருந்து தலையில் விழும் போது மூளை காயங்கள் அல்லது மூளை இரத்தப்போக்கு தவிர்க்கவும் ஹெல்மெட் உதவும்.


தஞ்சை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களிடம் பேசுகையில், விபத்து ஏற்பட்டால் சில நேரங்களில் தலை நசுங்கி உயிரிழப்பு ஏற்றுகிறது.   தக்காளி கிழே விழுந்தால் உடைந்து வீணாகிவிடும்  அது போல் தான் தலையும் என்பதால் தற்போது விலையும் உயர்ந்துள்ள தக்காளியை பரிசாக வழங்குகிறோம் என்றார்.


இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவதன் குறித்து போக்குவரத்து போலீசார் பல்வேறு வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு வெள்ளி காசுகள் பரிசு உட்பட பல பரிசுகளை வழங்கி ஹெல்மெட் அணிவதற்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் இவ்வாறு ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு தக்காளி கொடுத்துள்ளனர். போக்குவரத்து போலீசாரின் பணிகள் மிகவும் சிறப்பாக உள்ளது.


மேலும் பொதுமக்களிடம் கனிவாகவும் நடந்து கொள்கின்றனர். இதனால் ஹெல்மெட் அணியாதவர்கள் கூட தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.