தஞ்சாவூர்: தஞ்சையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 16ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.


இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளதாவது:


தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழி காட்டும் மையத்தின் மூலம் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. 


தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 615 சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


1. 7. 23 அன்று 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் இத்தேர்விற்கு 1 .6.2023 முதல் 30.6.2023 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. தஞ்சையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 16ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.


இப்பொழுது தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை தேர்வுக்கான பாடத்திட்டம் தேர்விற்கு தயார் செய்யும் விதம் பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை பணிக்கு தயாராகும் இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித் தகுதியை குறிப்பிட்டு 8110919990 வாட்ஸ்அப் எண்ணில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


பல்வேறு போட்டித் தேர்வுகள் மத்திய மற்றும் மாநில அரசால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசு வேலை வாய்ப்பினை பெறுகின்றனர். மத்திய அரசு போட்டித் தேர்வு டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசு நடத்துகிறது. 


மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் மூன்று கட்டத் தேர்வாகவே நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் நடத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் மெயின் தேர்வினை எழுத தகுதி பெறுவார்கள். பின்பு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்க்காணல் நடத்தப்படும்.  இவ்வாறு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி அளித்து இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று முன்னேற வேண்டும் என்று நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.