கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துவா்களின் விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட பேராலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளும், நட்சத்திரங்களும் அமைக்கப்பட்டுருந்தன. பின்னர் இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தொழுவத்தில் பிறந்த இயேசுவை தேவகுமாரன் மொம்மையை கும்பகோணம் மறை மாவட்ட ஆயா் அந்தோனிசாமி தொட்டிலில் இட்டார்.




தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருப்பலிகள் நடத்தப்பட்டது. அப்போது வானவேடிக்கைகளுடன் ஏராளமானோர் கொண்டாடினார்கள். தஞ்சையிலுள்ள துாய இருதய பேராலயத்தில், சிறப்பு திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடினார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.



கும்பகோணத்திலுள்ள கார்த்திக் வித்யாலயா பள்ளியில்  கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், கிறிஸ்துமஸ் பாடல்களுக்கும், அவரது பிறப்புகளை பற்றியும், நடனமாகவும், நாடகமாகவும் நடித்து காட்டினர்.  




இதனை தொடர்ந்து, பள்ளி மாணவன் ஒருவர், கிறிஸ்துமஸ் தாத்தா  போன்று வேடமணிந்து, அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகளையும், முககவசத்தை வழங்கினார். இதில், பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்து, பள்ளி மாணவர்கள் அனைவரும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், கட்டாயம் முககவசம் அணிந்து  பள்ளிக்கு வரவேண்டும், வீட்டிலுள்ளவர்களையும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார். இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்துவ கோயில்களிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.