சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் புதர்களை அகற்றி மண்ணை பதப்படுத்தி அதில் மூலிகை மலர் செடி, கொடிகளை நட்டு பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் காவல் ஆய்வாளர் மணிமாறன். இது மக்களிடையே மரக்கன்று வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய ஆய்வாளராக மணிமாறன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் காவல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக சுற்றுப்புற தூய்மையை விரும்பும் இவர் காவல் நிலையம் மற்றும் இன்றி காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி முழுவதையும் தினம் தூய்மையாக பராமரித்து வருகின்றனர். 




தற்போது காவல் நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பயன்பாடு அற்ற காலி இடங்களில் உள்ள புதர்களை அகற்றி அங்கு சமன் செய்து புதிதாக சவுடு மணல் பரப்பி அதனை தோட்டம் அமைக்க சிறந்த இடமாக மாற்றி  ரோஜா, மல்லி, முல்லை, செம்பருத்தி, அரலி உள்ளிட்ட பூச்செடிகளும், கற்பூரவள்ளி, துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை போன்ற மூலிகை செடிகள் மற்றும் கொய்யா, மா, மாதுளை, சப்போட்டா போன்ற பழ வகைமரங்களும், புங்கன், வேம்பு உள்ளிட்ட மரகன்றுகளையும் மக்களுக்கு பயன்படும் வகையில் நட்டு வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 




காவல் ஆய்வாளரின் மணிமாறனின்   இந்த சிறப்பான செயலை பார்ந்த சக சீர்காழி காவல் நிலைய காவலர்களும் ஆர்வமுடன்  செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சீர்காழி காவல் நிலையம் நுழைவாயில் முதல் அனைத்து பகுதிகளிலும் பசுமையான சோலை வனமாக மாறி வருகிறது. மேலும் காவல் நிலையத்திற்கு பல்வேறு பிரச்சினைகளுடன் மன உளைச்சலில் வரும் பொதுமக்களுக்கு, இந்த பசுமையான சூழல் மன அமைதியை உண்டாக்கும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து, காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் தொடர் பணிகளுக்கு இடையே காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களின் இயற்கையைப் பராமரிக்கும் இந்த செயல் சீர்காழி நகர மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.




தமிழ்நாடு அரசு சார்ப்பில் காவலர்களின் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு அவ்வப்போது யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வரும் இந்த சூழலில், காவலர்களின் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவதன் மூலம் குறையும் என இதில் ஈடுபட்டுள்ள காவல் ஆய்வாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.


காருண்யா பல்கலைக்கழகம் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதா என்பது குறித்து ஆய்வு - வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்