Thanjavur Power Shutdown: உஷாரய்யா உஷாரு... தஞ்சையில் நாளைக்கு இங்கெல்லாம் மின்தடை இருக்காது உஷாரு!!!

Thanjavur Power Shutdown 3.9.24 : தஞ்சாவூர் புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தஞ்சை மின்வாரிய இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் உதவிசெயற்பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சை புறநகர் பகுதிகளில்...

திருமலைசமுத்திரம் துணை மின்நிலையத்தில் இருந்து வரும் உயரழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வல்லம்புதூர், மொனையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

 செங்கிப்பட்டி பகுதியில் நாளை...

இதேபோல், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி. வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி ,ராயராம்பட்டி, சாணுரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, செங்கிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மேலும் அள்ளூர், அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கர சாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மின்தடை

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் சி.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருக்காட்டுப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் திருக்காட்டுப்பள்ளி, பழமார்நேரி, ரெங்கநாதபுரம், நேமம், இளங்காடு, அகரப் பேட்டை, கச்சமங்கலம், செய்யாமங்கலம், பாதிரகுடி, மாரநேரி, கல்லணை, தோகூர், கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, சுக்காம்பார், பூண்டி, நாகாச்சி, விஷ்ணம்பேட்டை, பவனமங்கலம், கூத்தூர், வானராங்குடி, பொதகிரி, மஹா ராஜபுரம், சாத்தனூர், வடுகக்குடி, வளப்பக்குடி, மைக்கேல்பட்டி, கண்ட மங்கலம், செந்தலை, மணத்திடல், நடுக்காவேரி, வெள்ளாம்பெரம்பூர், வரகூர், கருப்பூர், அம்பதுமேல்நகரம் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola