தஞ்சாவூர்: வயதானதால் தளர்ந்த நடை. அதிலும் வாக்கர் வைத்து நடக்கும் நிலை. தடுமாற்றத்துடன் வந்த அந்த மூதாட்டி நோக்கியே தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த அனைவரின் பார்வையும் இருந்தது. உடல் தளர்ந்து இருந்தாலும் உள்ளம் தளராமல் தன்னை ஏமாற்றி சொத்துக்களை வாங்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்ததாக தெரிவித்தார் அவர். என்ன விஷயம் தெரியுங்களா? வயதான நிலையில் உள்ள என்னை மகன் சரியாக கவனித்து கொள்வதில்லை. என்னிடம் இருந்து மகன் எழுதி வாங்கிக் கொண்ட சொத்துக்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் மனு அளித்தார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி ராமு அம்மாள் (84) என்பவர் வாக்கர் உதவியுடன் தள்ளாடியபடியே நடந்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்தேன். பின்னர் சொந்த ஊருக்கு வந்து கிடைக்கும் வேலையை செய்து வந்தேன். இட்லி வியாபாரம், காய்கறி வியாபாரம் போன்றவையும் செய்து வந்தேன். தற்போது வயது முதிர்வால் என்னால் முன்பு போல் வேலை பார்க்க முடியவில்லை. இருப்பினும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
தளர்ந்த உடல்... வாக்கருடன் நடை: மகன் பராமரிக்காததால் சொத்துக்களை மீட்டு தர கோரி தன்னந்தனியே வந்த தன்னம்பிக்கை பாட்டி
என்.நாகராஜன் | 27 Feb 2023 06:37 PM (IST)
காய்கறி விற்றது, இட்லி வியாபாரம் செய்தது போன்ற புகைப்படங்களையும் காண்பித்து கண்ணீர் சிந்தினார் அந்த மூதாட்டி.
மூதாட்டி ராமு அம்மாள்
Published at: 27 Feb 2023 06:37 PM (IST)