250 ஆண்டுகளுக்கும் மேல் உயிர்வாழும் 355 அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகுஞ்சுகள் இன்று நாகை கடலில் விடப்பட்டன.
கடல் வளத்தின் காவலன் என்று அழைக்கப்படும் 250 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடிய ஆலிவ் ரெட்லி அரியவகை ஆமைகளின் இனப்பெருக்கம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது. காலநிலை சூழ்நிலைக்கு ஏற்ப நாகை மாவட்டத்தில் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை 182 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள் அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன.
இந்நிலையில் முட்டைகளை சேகரித்து வரும் மாவட்ட வனச்சரக அலுவலர்கள் சீர்காழி, நாகை, கோடியக்கரை பகுதிகளில் குஞ்சு பொரிப்பகம் அமைத்து முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொறிக்க செய்து கடலில் விடுகின்றனர். நாகை, சாமந்தான்பேட்டை, நாகூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட முட்டைகளில் இருந்து 355 ஆலிவ் ரெட்லி ஆமைகள் குஞ்சு பொரித்தன. இதனை இன்று வன உயிரின சரகர் ஆதிலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள் இன்று நாகை சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் கடலில் விட்டனர்.
அப்போது பிறந்த குஞ்சுகள் தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் கடலில் நீந்தி சென்றன. இதற்காக எதிர் திசையில் காத்திருக்கும் முட்டையிட்ட தாய் ஆமைகள் கடல் திரும்பும் குஞ்சுகளை அரவணைத்து ஆழ்கடலுக்கு அழைத்து செல்வதும் அவர்களின் சுவாரஸ்யமான தகவலும் கூட. மீன் இனப்பெருக்கத்தையும், கடலை தூய்மை படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கும் ஆலிவ் ரெட்லி ஆமை. எனவே அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகளை காப்பதற்கு மீனவர்களும், கடலோர பகுதி மக்களும் பாலித்தீன், உள்ளிட்ட குப்பை கழிவுகளை கடலில் வீசாமல் பாதுகாத்தால் இருநூற்றாண்டுகாலம் உயிர்வாழும் அறிய ஆலிவ் ரெட்லி ஆமையினத்தை காக்கமுடியும் என்பதே நிதர்சனம்.