தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கீழகஞ்சமேட்டில் வசித்து வரும் சங்கரனுக்கு, பாரதி என்ற மனைவியும், 10 ஆம் வகுப்பு படிக்கும் சக்திபிரியா என்ற மகளும் உள்ளனர். கடந்த 1989 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், காளையார்கோயில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்  பணியில் சேர்ந்து, 33 வருடமாக உள்ள இவர், தற்போது பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.  சுகாதார ஒருங்கிணைப்பாளர் சங்கரன், டெங்கு, சிக்கன்குனியா, புகையிலை, பிளாஸ்டிக் ஒழிப்பு, கொரோனா தொற்று, குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை பற்றி வித்தியாசமான முறையில், அதே கதாபாத்திரங்களாக வேடமிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.




புகையிலையால் ஏற்படுவது குறித்து அரக்கன் போல் வேடமிட்டு பெரிய சிகரெட்டுடனும், போலியோ சொட்டு மருந்து அவசியத்தை குறித்த கழுத்தில் பதாதைகளுடனும், டெங்கு காய்ச்சலுக்கு டெங்கு கொசுவை போலவும், தொழுநோய் குறித்து தொழுநோயாளிகள் போலவும், பிளாஸ்டிகினால் ஏற்படும் தீமை குறித்து பிளாஸ்டிக்கை உடல் முழுவதும் சுற்றுக்கொண்டும், பொதுமக்களிடையே புற்றுநோயை ஏற்படுத்தும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மேலும், வேடமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, மக்களே அருகில் உள்ள இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருங்கள். கொரோனா தொற்று தாக்காமல் இருக்க முககவசம் அணியுங்கள், கைகளை கழுவுங்கள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள், புகை பிடிப்பதனால் கேன்சர் உருவாகும் என தனது கீச்சான, குரலில் எந்தவிதமான தயக்கமும் இன்றி கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், கடைத்தெரு மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அந்தந்த விழிப்புணர்வுக்கு ஏற்றவாறு  வேடமிட்டு,  காலை முதல் மாலை வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.




சுகாதார ஒருங்கிணைப்பாளர் சங்கரன் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார் என்றால், அப்பகுதி முழுவதுமுள்ள பொது மக்கள் திரும்பி பார்க்க வைத்துவிடுவார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில், வட்டார மருத்துவ மேற்பார்வையாளராக பணியாற்றிவரும் சங்கரன், தன்னால் மக்களுக்கு எந்தெந்த வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு தன்னால் முடிந்த வரை, எந்த பிரதிபலனும் பார்க்காமல் மக்களிடையே, சென்றடைய வேண்டும் என்பதற்காக தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து இந்த நிகழ்ச்சியை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சொந்தமாக இயற்றிய பாடலை பாட்டுப் பாடியும் அதற்கேற்றாற்போல் நடனமாடியும்,  சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்கு கை கோர்த்து, நடனமாடியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.  இதுகுறித்து சுகாதார ஒருங்கிணைப்பாளர் சங்கரன் கூறுகையில்,




டெங்கு, சிக்கன் குனியா, கொரோனா  உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அந்த பாத்திரத்திற்கு ஏற்ற வாறு வேடமிட்டு சென்றால் மக்கள் மனதில் எளிதில் பதியவைக்க முடியும். எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்களிடையே இது போன்ற விழிப்புணர்வு மூலம் நல்ல கருத்தை என்னால் முடிந்த வரை பதிவு செய்கிறேன்.  எனது பணியை மனதார விழிப்புணர்வுடன் செய்வதால், இதுபோன்ற நிகழ்ச்சியை ஆவலுடன் செய்ய முடிகிறது.


இது போன்ற வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை செய்வதால் எனது மேல் அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். கும்பகோணம் பகுதியிலுள்ள பள்ளிகளில், மாணவர்களிடையை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அழைத்து செல்கின்றார்கள். சிறுமி திருமணம் திருமணம் செய்யக்கூடாது என்பதை கிழவன் போல்  வேடமிட்டு நடித்தேன். இதேபோல் வெயிலை புகைப்பதால் பைத்தியம் பிடித்தது போலவும், பிளாஸ்டிக் கேரி பை தொற்று ஏற்படும் அபாயம் குறித்து இருப்பதால் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.


தமிழக அரசு சுகாதாரத் துறையில் என்னென்ன விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடடுகிறதோ, அதற்கேற்றார் போல் வேடமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதுபோல் சுமார் 25-க்கும் மேற்பட்ட வேடங்களில் வேடமிட்டு நடித்திருப்பது பெருமையாகவும் கௌரவமாகவும் இருக்கிறது. எனக்கு கொடுத்த அரிய வாய்ப்பால், நான் மனமகிழ்ச்சியுடன் செய்து வருகின்றேன். இதற்காக யாரிடமும், எந்த உதவியும் கேட்பதில்லை.  எனவே, பொது சுகாதார துறை மூலமாக நிறைவேற்றப்படும் திட்டங்கள், அனைத்தும் மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதனை தடுக்கும் முறைகள் பற்றியும், நீர், கொசு, காற்றுகள் மூலம் ஏற்படும் நோய்கள் குறித்து, தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது ஆசை. நோயில்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு,  சுகாதாரத்துறையும், தமிழக அரசும், அனுமதியளித்து, ஆவணம் செய்ய வேண்டும் என்றார்.