தஞ்சாவூர்: தக்காளியை தூக்கி சாப்பிட்டு விலை உச்சத்தில் இருந்த பூண்டு தற்போது படிப்படியாக விலை குறைந்து வருகிறது. தஞ்சையில் பூண்டு விலை சற்று குறைந்து நாட்டு பூண்டு கிலோ ரூ.350 விற்பனையாகிறது. தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகம், மராட்டியம், ஆந்திரா, தெலங்கனா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதேபோல், வடமாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பூண்டு இங்கு விற்பனைக்கு வரும். அங்கிருந்து பூண்டு விற்பனைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வழக்கமாக தஞ்சை உழவர் சந்தைக்கு 10 முதல் 20 டன் வரை பூண்டு விற்பனைக்காக வரும். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக வரத்து குறைவினால் 4 முதல் 5 டன் வரை மட்டுமே பூண்டு வருகிறது. பூண்டு ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து. அதிலும் குறிப்பாக செரிமான கோளாறை தடுப்பதற்கும், ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பயன்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் நாள்தோறும் அதிகளவில் வாங்கி செல்வார்கள். ரசம், பொரியல், புளிக்குழம்பு உட்பட சமையலில் பூண்டு முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
தக்காளியை தூக்கி சாப்பிட்டு உச்சத்தில் இருந்த பூண்டு.. தற்போது படிப்படியாக குறையும் விலை
என்.நாகராஜன் | 22 Feb 2024 07:52 PM (IST)
வடமாநிலங்களில் பூண்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெறுவதால் பூண்டு விலை இனி படிப்படியாக குறையும். பூண்டு விளைவிக்கும் பகுதியில் தற்போது விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பூண்டு
Published at: 22 Feb 2024 07:52 PM (IST)