தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு மகன் உச்சாணி (எ) விமல் (25). இவர் வீட்டு வாசலிலேயே டிபன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் மீது கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் காவல் நிலையங்களில் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில்,  அவரது வீட்டருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு டூ விலீரில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள், விமலை சராமாரியாக தாக்கி, வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் சம்பவ இடத்திலேயே விமல் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த நாச்சியார்கோவில் போலீசார், உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த விமலின் தாய் தமிழரசி அளித்த புகாரின் பேரில், தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளிபிரியா காந்தபுனேனி உத்தரவில்,  தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் எஸ்.எஸ்.ஐ மோகன் தலைமையிலான போலீசார், கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த ராவணன் மகன் தர்மராஜ் (28) என்பவரை கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கைது செய்தனர்.



இதனை தொடர்ந்து திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் மேற்பார்வையில், நாச்சியார்கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் எஸ்.ஐ காமராஜ் தலைமையிலான போலீசார் கைதான தர்மராஜை விசாரணை செய்ததில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விசாரணையின் பேரில் கும்பகோணம் சத்யா நகரை சேர்ந்த ராவணன் மனைவி ரேமா (44), அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன்கள் சதீஷ் (32), சந்தோஷ் (24) மற்றும் ஊசி மாதா கோவில் புது தெருவை சேர்ந்த குமார் மகன் விஜய் (27) ஆகியோரை கைது செய்தனர்.


மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள 4 முக்கிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விமலின் நண்பர் வெங்காயம் (எ) வெங்கடேசன் என்பவரும் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். காலப்போக்கில் அப்பெண் வெங்கடேசனை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனைய அறிந்த அப்பெண்ணின் தாயார், தனது பெண்ணை கண்டித்துள்ளார். ஆனால் அப்பெண் வெங்கடேசனை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த வெங்கடேசன், பயந்து கொண்டு, சென்னைக்கு சென்று விடுகிறார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், பிரச்சனை முடிந்திருக்கும் என நினைத்து கொண்டு, பொங்கல் விழாவிற்கு வெங்கடேசன் ஊருக்கு வந்தார்.




இதனை அறிந்த அப்பெண்ணின் சகோதர், ஏன் வந்தாய், என்றும் உன்னை தூக்கி விடுவேன் என்று, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன வெங்கடேசன், அதே பகுதியை சேர்ந்த  உச்சாணி (எ) விமலை, சந்தித்து, நடந்தவற்றை கூறினார். இதனை அடுத்து, விமல், அப்பெண்ணின் சகோதரிடம், வெங்கடேசனை ஏன் மிரட்டினாய், தைரியமான ஆம்பளையாக இருந்தால், வெங்கடேசனை தூக்கி பார் என்று, பதிலுக்கு மிரட்டியுள்ளார். அப்பெண்ணின் சகோரதர்,  தன்னை ஆம்பளையா என்று கேட்தால், ஆத்திரமடைந்து,  தனது நண்பர்களுடன் சேர்ந்து விமலை கொலை செய்ய முடிவு செய்தனர். இதனை தொடந்து வீட்டின் அருகே விமல் பேசி கொண்டிருந்த போது ஐந்துக்கும் மேற்பட்டவர்கள், கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து, விமலை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே விமல் இறந்தார் என்றனர்.