தஞ்சாவூரில், தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  உஷா தலைமையில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டம்  நடைபெற்றது. அப்போது, தி.மு.க., மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நிதி ஒதுக்கீட்டில் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால், வெளிப்படை தன்மை இல்லை, கடந்த ஒன்றை ஆண்டுகளாக போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது, பேசிய மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா பேசுகையில், நிதி பாற்றக்குறையால் வார்டு உறுப்பினர்களுக்கு, தேவையான அளவு நிதியை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. மேலிடத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுள்ளோம். கடந்த முறை ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 28 வார்டு கவுன்சிலர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது என்றார்.




அப்போது கூட்டத்திலிருந்த மற்ற தி.மு.க.,கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களுக்கு ஆதரவாகப் பேசினார். இருப்பினும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களை சமாதானம் செய்து, கூட்டத்தில் பங்கேற்க வைத்தார். இது குறித்து வெளிநடப்பு செய்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் முடிந்து அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த போதிலும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான நிதி வழங்காவிட்டாலும், பணிகளுக்கு தகுந்தாற் போல் நிதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தி.மு.க., ஆளும் கட்சியாக இருக்கும் பட்சத்தில், திமுக உறுப்பினர்களுக்கே நிதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. நிதி ஒதுக்கீட்டில் இதுவரை வெளிப்படை தன்மை என்பது இல்லை. தெரு விளக்கு பொறுத்துவதற்கு கூட நிதி இல்லை என்கிறார்கள்,  இது போன்ற நிலைமையால், வார்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.




எங்களை நம்பி வாக்களித்து வெற்றி பெற செய்த பொது மக்களுக்கு எப்படி பணியாற்றுவது. அரசுக்கு கெட்ட பெயர் பெற்று தரக்கூடாது என்று நிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு, நிதி வழங்குவதில், வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது. இதனால் கடந்த கூட்டத்தில், தீர்மானங்களில் கையெழுத்திட உறுப்பினர்கள் மறுத்த நிலையில், எம்.பி., பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் சமாதானம் செய்தனர். முதல்வர் இதற்குத் தீர்வு காண வேண்டும். இதனால் தமிழக அரசுக்கும், திமுகவிற்கும் கெட்டப்பெயரை பொது மக்களிடையே ஏற்படுத்தும் என்றனர்.


Watch Video | 18 நிமிடங்கள் மகனுடன் சந்திப்பு; கையெடுத்து கும்பிட்ட நிமிடம்.. இறுக்கத்தில் ஷாருக்கான்