தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 5 கோடியே 66 லட்சம் மதிப்பில் புதிய பல்வேறு துறைச் சார்ந்த அரசு கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.5 கோடியே 66 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் புதிய பல்வேறு துறைச் சார்ந்த அரசு கட்டடங்களை 
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 


கிராமப்புறங்களில் அரசுத் துறைகளின் கட்டடங்களை நேரில் சென்று திறந்து வைத்து மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களின் குறைகளை களைய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டம் பூண்டி ஊராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோகக் மையக் கட்டடம் திறக்கப்பட்டது.


இதேபோல் சாலியமங்கலம் ஊராட்சியில் ரூ.17,40 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோகக் மையக் கட்டடமும். அருந்தவபுரம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடமும், ரூ.4.61 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியார் சிலையும், ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடமும், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோகக் மையக் கட்டடமும் திறக்கப்பட்டது.


மேலும் கருப்பமுதலியார்கோட்டை ஊராட்சி ராஜாபுரத்தில் ரூ.13.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடமும், அன்னப்பன்பேட்டை ஊராட்சி காட்டுகுறிச்சியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோகக் மையக் கட்டடமும், காவலூர் ஊராட்சியில் ரூ.14.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடமும், ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது விநியோகக் மையக் கட்டடமும், பெருமக்கநல்லூர் ஊராட்சி வையசேரியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிராம செயலக கட்டடமும், வையசேரி ஊராட்சியில் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோகக் மையக் கட்டடமும், ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிராம செயலக கட்டடமும் திறக்கப்பட்டது.


வேம்பகுடி ஊராட்சியில் ரூ.15.27 லட்சம் மதிப்பீட்டில் பால் கொள்முதல் நிலைய கட்டடமும், திருவையவதகுடி ஊராட்சியில் ரூ.28.67 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடமும், பாபநாசம் வட்டம் பாபநாசம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.124.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய எட்டு வகுப்பறைக் கட்டடமும், உமையபுரம் ஊராட்சியில் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய இரண்டு வகுப்பறைக் கட்டடமும், ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிராம செயலக கட்டடமும். ஆதனூர் ஊராட்சியில் மருதுவகுடியில் ரூ.12.51 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோக மையக் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இதேபோல் சந்தனபுரம் ஊராட்சியில் ரூ.12.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொதுவிநியோக மையக் கட்டடமும். பெருமாள்கோயில் ஊராட்சியில் சந்தனபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூட கட்டடமும். வீராமாங்குடி ஊராட்சியில் ரூ.29.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடமும் என ஆக மொத்தம் ரூ. 5 கோடியே 66 இலட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் 22 புதிய பல்வேறு துறைச் சார்ந்த அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்து செல்வம், ஒன்றியக் குழுத் தலைவர்கள் சுமதி கண்ணதாசன் (பாபநாசம்), கே.வீ.கலைச்செல்வன் (அம்மாபேட்டை), கோவி.அய்யாராசு அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.