பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் காணாமல் போனதாக கருதப்பட்ட சண்டிகேஸ்வரர் ஐம்பொன் சிலை, அதே கோயிலில் பாதுகாப்பு அறையில் இருந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீஸ்வரர்
மேலும், இதே கோயிலில் இருந்து 60 க்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் திருடு போய் விட்டதாக, வெங்கட்ராமன், கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது, கீழ்மனக்குடி விஸ்வநாதசுவாமி மற்றும் ரங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயில்களில் 8 சிலைகள் திருட்டு போய் விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். திருட்டு போன சிலைகளின் புகைப்படங்களை வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஒரு பழமையான சண்டிகேஸ்வர் உலோக சிலையும் காணாமல் போனது தெரியவந்தது.இந்நிலையில் பசுபதீஸ்வரர் கோயிலில் காணாமல் போனதாக கருதப்பட்ட சண்டிகேஸ்வரர் ஐம்பொன் சிலை, கீழமனக்குடி கோயில் சிலையாக கணக்கில் இருந்து, பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோயில் பாதுகாப்பு அறையில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை அடிப்படையில் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
நியாய விலை கடையில் தரமற்ற அரிசி விநியோகம் - கீழே கொட்டி பொதுமக்கள் போராட்டம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் க.ஜெய்ந்த்முரளி உத்தரவின் பேரில், கூடுதல் கண்காணிப்பாளர்கள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோர் நேற்று இந்த சிலையை, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கும்பகோணத்தை மையமாக கொண்டு விசாரிக்க காரணமாக இருந்ததும், சிலை கடத்தல் துறை விஸ்வரூபம் எடுப்பதற்கு பந்தநல்லுார் மற்றும் மனக்கடி கிராமத்திலுள்ள கோயில் சிலைகள் காணமாமல் போனது தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூரில் கடும் வைக்கோல் தட்டுப்பாடு - கேரளாவுக்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் மாடுகள்