நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற பேராலயம் ஆன்மீக ஸ்தலமாகும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு சாதி மத பேதமின்றி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் உலக நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வாகன திருட்டு, செயின் பறிப்பு, பணம் திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்கிறது, வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கருணாமூர்த்தி, முகமது அசாருதீன் இருவரும் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது போதை ஆசாமிகள் காவல்துறையினரை தாக்கிய அதிர்ச்சி சம்பவமும் நடைபெற்றது.

 



 

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி கடற்கரையில் நாகையை சேர்ந்தவர் குடும்பத்தோடு சுற்றி பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் பேபி என்பவரின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை அறுத்து சம்பவமும், வேளாங்கண்ணியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகள் வாடகை  வேனை மாயமானது இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற வேன் உரிமையாளருக்கு அவரது வேன் திருச்சி டோல்கேட்டில் சுங்க கட்டணம் கட்டிய தான் இருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது இதனையும் காவல்துறையிடம் தெரிவித்தபோது துரிதமாக செயல்பட்டு வாகனத்தை மீட்டனர், மேலும் இம்மாதம் பிரதம புரத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவர் பயணிகள் ஆட்டோவை இரவு  நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்றவர் காலையில் ஆட்டோவை எடுக்க வந்தபோது காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

 



 

பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆட்டோவை எடுத்துச்செல்வது தெரியவந்தது இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,  இந்த நிலையில் மேலும் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது, பிரதாபராம்புரம் ஊராட்சியை சேர்ந்தவர் ரமேஷ் இவர் திருப்பூண்டியில் பிராய்லர் கோழி மொத்த கடை வைத்துள்ளார். அவருக்கு சொந்தமான ஈச்சர் வாகனத்தில் கோழிகளை ஏற்றிக் கொண்டு மற்ற சில்லரை கோழி கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். சிந்தாமணி மெயின் ரோட்டை சேர்ந்த மணிக்கண்டன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12.12.2021 அன்று வேளாங்கண்ணி அருகே உள்ள பறவை என்னும் ஊரில் கோழிகளை இறக்க வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது ஓட்டுனருடன் 3 பேர் இருந்துள்ளனர். வாகனத்தில் கோழி கடைகளில் வசூல் செய்த பணம் ஒரு லட்சம் இருந்துள்ளது. கோழியை இறக்கி விட்டு டிரைவர் மணிக்கண்டன் திரும்பி வந்து பார்க்கும் போது ஒரு லட்சம் பணத்தை காணவில்லை என தெரிவித்துள்ளார்.

 



 

இதனையடுத்து கோழி கடை உரிமையாளர் ரமேஷ் இது சம்பந்தமாக வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் குடுத்ததை தொடர்ந்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அந்த பணத்தை டிரைவரே பணத்தை திருடி அருகில் உள்ள புதரில் மறைத்து வைத்தது தெரியவந்துள்ளது. உடனடியாக டிரைவர் மணிக்கண்டனை வேளாங்கண்ணி போலிசார் கைது செய்து அவர் திருடிய ஒரு லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். சுற்றுலா தளங்களில் நடைபெறும் துணிகர சம்பவங்களை தடுத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.