தஞ்சாவூர்: 7 மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது விபத்தில் சிக்கி தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு பிற மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் தஞ்சை ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் சிறப்பான சிகிச்சை அளித்து நடக்க வைத்துள்ளனர். தற்போது அந்த இளம்பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.
விபத்தில் சிக்கிய 7 மாத கர்ப்பிணி பெண்
தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஷோபனா (27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிநிலையில் ஷோபனா 3வது முறையாக கர்ப்பம் தரித்தார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் திடீரென சாலை விபத்தில் ஷோபனா பலத்த காயமடைந்தார். இதில் அவரது தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு வயிற்றில் 7 மாத குழந்தை உள்ளதால் ஆபரேஷன் செய்வதில் சிரமம் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கைக்கொடுத்து காப்பாற்றிய மருத்துவமனை
இதனால் நிலைகுலைந்து போன ராஜேஷ் மனைவி மற்றும் குழந்தைகளை பத்திரமாக காப்பாற்ற எந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என உறவினர்களிடம் கேட்டுள்ளார். அப்போது தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்றால் தாய், சேய் இரண்டு பேரையும் காப்பாற்றி விடலாம் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினர்
உடனே ராஜேஷ் தனது மனைவி ஷோபனாவை அழைத்துக் கொண்டு ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு எலும்பு முறிவு மற்றும் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கனகசாரதி தலைமையில் டாக்டர்கள் குழுவினர் ஷோபனாவுக்கு சிகிச்சை அளித்தனர். வயிற்றில் 7 மாத குழந்தை உள்ளதால் எக்ஸ்ரே, ஸ்கேன் செய்யும் போது கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து ஷோபனா உடலில் சீட் வைத்து பாதுகாப்பான முறையில் எக்ஸ்ரே எடுத்தனர். முழுக்க முழுக்க மிகவும் பாதுகாப்பாக ஷோபனாவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் தொடை எலும்பு முறிவை சரி செய்வதற்கான ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது
இதனை தொடர்ந்து சிறிது நாட்களில் ஷோபனா டிஸ்சார்ஜ் ஆகி தற்போது மூன்றாவது குழந்தையை ஆரோக்கியமான முறையில் சுகப்பிரசவமாக பெற்றெடுத்தார். இதுகுறித்து டாக்டர் கனகசாரதி நிருபர்களிடம் கூறியதாவது: விபத்தில் காயம் அடைந்த ஷோபனா மிகவும் இக்கட்டான நிலையில் ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு மகப்பேறு மருத்துவர் அனுசுயா பரிசோதனை செய்து வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என சோதனை செய்தார். அதில் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என தெரிய வந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் கிருத்திகா மற்றும் அவரது குழுவினர் டாக்டர்கள் ராம்ஜி, சக்தி ஆகியோர் பரிசோதனை செய்தனர்.
இயல்பான முறையில் நடக்க தொடங்கினார்
அதன் பிறகு எனது தலைமையில் குழுவினர் ஷோபனாவுக்கு மிகுந்த கவனத்துடன் ஆபரேஷன் செய்து வெற்றிகரமாக முடித்தோம். ஆபரேஷன் முடிந்த சிறிது நாட்களில் ஷோபனா இயல்பான முறையில் நடக்க ஆரம்பித்துவிட்டார். அவரது வேலையை அவரே செய்ய தொடங்கினார். பத்து நாட்கள் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் 10 மாதம் ஆனவுடன் ஷோபனா இந்த மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுகப்பிரசவமாகி அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தார். தற்போது தாய், குழந்தை நல்ல முறையில் உள்ளனர். இந்த வெற்றிகரமான சிகிச்சைக்கு ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணி புரியும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர். ஒட்டுமொத்த அனைத்து குழுவுக்கும் கிடைத்த வெற்றியாகும். குறிப்பாக மருத்துவமனையின் தலைவர் ஆர்.எம். பாஸ்கரன் பக்கபலமாக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஷோபனா கூறும்போது, விபத்தில் நான் சிக்கியதும் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிப்பது சிரமம் என கூறி மறுத்துவிட்டனர். ஆனால் ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்னை கைவிடவில்லை. நல்ல முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தி விட்டனர். ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன், மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கர்ப்பக்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும்
இதையடுத்து ஏ டூ இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் ஆர்.எம். பாஸ்கரன் கூறியதாவது: பெண்கள் கர்ப்பக் காலங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். முடிந்தளவு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்வது என்றாலும் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும் . எதிர்பாராத விபத்தில் சிக்கினால் தாய் மற்றும் வயிற்றில் உள்ள சிசு பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்ப காலங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மேட் அணிந்து செல்வது பாதுகாப்பை அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து பச்சிளம் குழந்தைக்கு மருத்துவமனை தலைவர் ஆர்.எம். பாஸ்கரன் , டாக்டர் கனகசாரதி உள்ளிட்ட பலர் பரிசு வழங்கினர்.