இன்று திருவள்ளுவர் தினத்திலும், 26ம் தேதி குடியரசு தினத்தன்றும் தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு அதிக குடிமகன்கள் கூட்டமாக மதுபாட்டில்கள் வாங்க குவிந்தனர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 16-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினமும், வருகிற 26-ந் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது. எனவே அந்த 2 நாட்களும் தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் முதல்நாளே அதிகளவு குடிமகன்கள் குவிந்து தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கிச் சென்றனர். தஞ்சையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரவு வரை நீண்ட க்யூ இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.






கிரையதாரர்களுக்கு அறிவிப்பு

கிரையதாரர்கள் அனைவரும் தங்களது ஆவணங்களுக்கு ஏற்படும் குறைவு முத்திரை தீர்வையினை செலுத்தி ஆவணத்தை விடுத்துக் கொள்ள தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 119-ல் உள்ள தனித் துணை ஆட்சியரை (முத்திரைக் கட்டணம்) தொடர்புக் கொண்டு இச்சிறப்பு முனைப்பு இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு பதிவுத்துறை சார்பாக 1.1.2023 முதல் 31.3.2023 வரை சிறப்பு முனைப்பு இயக்கமாக தஞ்சாவூர் வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டமாகவும் 4 அலகுகளை உள்ளடங்கிய 49 சார் பதிவகத்தில் பதிவு செய்து குறைவு முத்திரை தீர்வை செலுத்தப்படாமல் உள்ளது.

நாளது வரை நிலுவையில் உள்ள இனங்களான இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவுகள் 47 (A1), 47 (A3) மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் உள்ள ஆவணங்களில் ஏற்பட்டுள்ள முத்திரைத் தீர்வையினை செலுத்தி ஆவணங்களை கிரயத்தாரர்கள் விடுத்துள்ளக் கொள்ளலாம் என்று பதிவுத்துறை தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவ்வாறான கிரையதாரர்கள் அனைவரும் தங்களது ஆவணங்களுக்கு ஏற்படும் குறைவு முத்திரை தீர்வையினை செலுத்தி ஆவணத்தை விடுத்துக் கொள்ள தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 119-ல் உள்ள தனித் துணை ஆட்சியரை (முத்திரைக் கட்டணம்) தொடர்புக் கொண்டு இச்சிறப்பு முனைப்பு இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ள கிரையதாரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.