தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில், 232 பேருக்கு ரூ.1.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்றார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்து பேசியதாவது: இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்கள் தொகை, முதல்வரின் முகவரி துறையில் இருந்து வரப்பெற்ற மனுக்களின் நிலுவை விவரம், ஆதிதிராவிட நலப் பள்ளியில் எண்ணிக்கை, நான்கு மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விபரம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம், ஆதிதிராவிடர் நல விடுதிகளின் எண்ணிக்கை. கடந்தாண்டு விடுதிகளில் தங்கி கல்வி பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரம், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம், அடிப்படை வசதி, தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம், மயானம் மற்றும் மயானப்பாதை வசதி திட்டம், சமத்துவ மயானம், ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட பணிகள், பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம், நீதிமன்ற வழக்குகள் விவரம், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், வங்கியில் கடன் பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், வங்கியில் முன்புழிவு பெறாமல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், நிதியாண்டில் பொருளாதாரம் மேம்பாட்டத்தின் கீழ் இலக்கு மற்றும் சாதனைகள், தஞ்சாவூர் மண்டலத்திற்கு உட்பட்ட கட்டுமான பணிகள் போன்ற பல்வேறு பொருளடக்கம் இக்கூட்டத்தில ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 232 பேருக்கு ரூ.1.86 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
என்.நாகராஜன் | 24 Jun 2023 03:24 PM (IST)
தமிழக மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் ஆதிதிராவிடர்களாக உள்ளனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Published at: 24 Jun 2023 03:24 PM (IST)