மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த மாதிரி பள்ளியில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6-ம் முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். தமிழ் மட்டும் ஆங்கில வழி கல்வி மற்றும் இன்றி மற்ற அரசு பள்ளிகளை விட இங்கு கூடுதல் திட்டங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, தனியார் பள்ளியில் பயிலும் தங்கள் குழந்தைகளை கூட இப்பள்ளியில் மாற்றி சேர்த்து வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு இணையான கல்வியினை கட்டணம் இன்றி வழங்கும் நோக்கில் அரசு இப்பள்ளியை நடத்தி வருகிறது.
இத்தகைய சூழலில் குத்தாலம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு வகுப்புகளுக்கும் தகுந்தாற்போல் பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஒரு மாணவரின் தந்தை மாவட்ட கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டே கேட்டதற்கு, அவ்அலுவலத்தில் வெவ்வேறு அலுவலர்கள் வெவ்வேறு மாதிரியான தகவலை கூறுவதும், இறுதியாக ஒரு அலுவலர் அரசு மாதிரி பள்ளி மட்டுமல்ல மாவட்டத்தில் எந்த அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்காக எந்த ஒரு பணமும் வசூலிக்க கூடாது என்றும், குத்தாலம் பள்ளியில் வசூலிப்பது தொடர்பாக தாங்கள் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
Arignar Anna Zoological Park: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சர்ப்ரைஸ் - வருகிறது 3டி 7டி தியேட்டர்
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் இல்லாத காரணத்தால், தனியாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆங்கில வழி வகுப்புகளுக்கு 5 ஆசிரியர்கள் 8000 ரூபாய் ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய், அதுபோன்று பள்ளி தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊதியம், எல்லாவற்றுக்கும் மேலாக பள்ளிகளில் இலவசமாக வழங்கும் சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவை வழங்கும் விழாக்களுக்கு அமைச்சர், அதிகாரிகள் என வருவதாகவும், அதற்காக லட்சக்கணக்கில் செலவவாதல் அதை எல்லாம் சரி செய்ய இதுபோன்று மாணவர்களிடம் வசூல் செய்வதாக தகவல் கிடைத்தன.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா நிகழ்ச்சி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். இந்நிலையில் பள்ளியின் பல்வேறு தேவைகளுக்காக மாணவர்களிடம் வசூல் செய்வதும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்கள் அதிக அளவில் இருப்பதாகவும், அதனால் புதிய கல்வி கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாத பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடும் நிலையில் இது போன்று அரசு பள்ளிகளில் மறைமுகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.