வரும் 13ம் தேதி 22 மண்டலங்களில் மறியல்... போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்.. ஏன் தெரியுமா?
பழைய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவில் உள்ள ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்: அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி தமிழகத்தில் 22 மண்டலங்களில், மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க; Singer Krish: "அடிச்சா எந்திரிக்காத அளவிற்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்" -பாடகர் கிரிஷ் அதிரடி.
Just In




தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பான ஆயத்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டம்:
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவில் உள்ள ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் இரண்டாவதாக உள்ள தமிழ்நாட்டில் ஏன் இன்னும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அரசு பணியிடங்களில் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. பல பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றனர். அதை கைவிட்டு நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். அரசு ஊழியர்களை அடிமையாக வைக்கும் முறையை கைவிட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ஊதியத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர்களுக்கு ஊதியம் நான்கைந்து மாதங்கள் நிலுவையில் இருப்பதை உடன் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான, சரியான எடையில் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும்.
இதையும் படிங்க; நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு வெளியிட்ட உத்தரவு:
அரசு ஊழியர்கள் பணி நியமனம், பதவி உயர்வு, இடமாறுதல் ஆகியவை வெளிப்படைத் தன்மையாக நடைபெற வேண்டும். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கை முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசிடமிருந்து அண்மையில் ஒரு உத்தரவு வந்துள்ளது. அரசு ஊழியர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவு வந்துள்ளது. அரசு ஊழியர்களின் உரிமைக்கு எதிராக இந்த உத்தரவை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
ஊழியர்கள் போராட்டம்:
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி தமிழகத்தில் 22 மண்டலங்களில், மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் ஊழியர்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாநிலத் துணைத் தலைவர் வ.ஆறுமுகம் உடனிருந்தார்.