ஒரத்தநாடு அருகே பருத்தியப்பர்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 17 வயதுடைய மகள் ஒரத்தநாட்டிலுள்ள லிட்டில் ரோஸ் மெட்ரிக் தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் கணித ஆசிரியர் சசிகுமார் என்பவர், சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக, பள்ளியில் படிக்கும் சில மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம், பள்ளியில் கணித ஆசிரியர் திட்டியதால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
இதையடுத்து மாணவியின் சித்தப்பா சிவக்குமார் என்பவர், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் கணித ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் சசிகுமார் மீது வழக்குப்பதிந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிகள் ஒரு ஆசிரியரின் புகைப்படத்தை எடுத்து கிண்டல் செய்யும் நோக்கில் செல்போன்களில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். இதை பார்த்த ஆசிரியர்கள் ஸ்டேட்டஸ் வைத்துள்ள மாணவிகளை அழைத்து கண்டித்துள்ளனர்.
அப்போது அப்பள்ளியின் துணை முதல்வர் சசிகுமார்,பொது தேர்வில் மதிப்பெண் குறைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற மாணவிகள் முன்பு திட்டிவிட்டதால் மாணவி மன வேதனையுடன் இருந்தார்.
வழக்கம் போல் தனது அறையில் படுக்க சென்ற அவர் நீண்ட நேரம் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்துகொண்டு உள்ளே பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கியிருந்தார்.
உடனே அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பிறகு மாணவியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: TN Urban Local Body Election News LIVE: வேலூர்: 8வது வார்டு கவுன்சிலர் எதிர் போட்டியின்றி தேர்வு