மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஆட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்வரின் மகன் 28 வயதான முருகானந்தம். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். வழியில் மாந்தை மேல் அய்யனார்குடி என்ற இடத்தில் உள்ள நக்கம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்போன் அழைப்பு வந்ததை அடுத்து முருகானந்தம் தனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கம்... உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தம்பதி எடுத்த விபரீத முடிவு!
அப்போது, கும்பகோணத்தில் இருந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டீசலை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்ற டேங்கர் லாரி அதிவேகமாக வந்தபோது ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே திருப்பத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து உள்ளது. இதில், சாலையோரம் நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்த முருகானந்தம் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து டீசல் வெளியேற தொடங்கியது. இதனை கண்ட லாரி ஓட்டுநர் உடனடியாக டேங்கர் லாரியை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
திருவண்ணாமலை: காதல் திருமணம்; இரண்டே மாதத்தில் புதுப்பெண் உயிரிழப்பு - வரதட்சணை கொடுமையா?
தகவலறிந்த பாலையூர் காவல்துறையினர் மற்றும் மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிபத்து ஏதும் ஏற்படாமல் தடுக்க சாலையில் வழிந்தோடிய டீசல் மற்றும் வாகனத்தின்மீது மயிலாடுதுறை தீயணைப்புதுறை நிலைய அலுவலர் முத்துக்குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் நுரைகலவையை அடித்தனர். பின்பு பாதுகாப்பாக 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர்.
மேலும் விபத்து குறித்தும் பாலையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த முருகானந்தம் குடும்பத்திற்கு உடனடியாக உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் தப்பி ஓடிய ஓட்டுநரை கைது செய்து நடடிவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து இறந்த முருகானந்ததின் உடலை உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.