திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் வேட்பாளரின் கணவருடைய நண்பர்களே இந்த செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி நகரமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக தலைமை அறிவிப்பை மீறி திமுகவினர் பல்வேறு இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றி பெற்று இருந்தார்கள். இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்று இருந்ததால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர் பதவி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் சிபிஎம் கட்சியின் வேட்பாளராக ராமலோகேஸ்வரி என்பவர் நிறுத்தப்பட்டிருந்தார் அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி நடைபெற்ற தேர்தலில் திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஆர் எஸ் பாண்டியன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அன்று அதிகாலை சிபிஎம் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ராமலோகேஸ்வரியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது இந்த சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என சிபிஎம் கட்சியினர் சார்பில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக கடந்த 3 மாதகாலமாக தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த விசாரணையில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் ராமலோகேஸ்வரியின் கணவர் ரகுராமின் நண்பர்கள் ஜெயராஜ் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்திற்கும் திமுகவினருக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
அதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நகர் மன்ற துணைத் தலைவருக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நேரத்தில் திருதுறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராக இருந்த ராம லோகேஸ்வரியின் கணவர் ரகுராம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.அதற்குப் பிறகு நகர்மன்ற துணைத்தலைவருக்காண மார்க்சிஸ்ட் வேட்பாளர் மாற்றப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த நிகழ்வு அரசியல் சூழலில் மிக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு ஒன்றாக அப்போது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.