டெல்லியில் 21 வயதான பெண் போலீஸ் மார்பகங்கள் அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல்,  குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், போலீஸ் அதிகாரி சபியாவுக்கு நீதி வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.




கொல்லப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துடிப்புடன், நேர்மையாகவும்,  ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக பணியாற்றினார். இப்பணிக்காக பலரும் அவரை பாராட்டியுள்ளனர். இந்த  நிலையில் அவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் முறையில் கடத்தப்பட்டு வெட்டு காயங்களுடன், மார்பகங்கள் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின்  தலைநகரமான டெல்லியில், ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள கொடுரமான செயலாகும்.  நினைத்தாலே அச்சம் ஏற்படுகிறது. ஆனால் இந்த அராஜகத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, சாதரணமான ஒரு நிகழ்வாக கடந்து செல்வது போல இருப்பது வேதனையாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் இதுவரை யாரையும், போலீசார் பிடிக்கவில்லை, கைதுசெய்யவில்லை. அந்த வழக்கினை கிடப்பில் போட்டுள்ளது. ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கே இந்த நிலை எனில், சாதாரண பெண்களின் பாதுகாப்பு இனி என்னவாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் பெண் போலீஸ் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கண்டித்து தஞ்சை ரயிலடியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்முகம்மது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாஜாஜியாவூதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜாபர், அப்துல்லா, வடக்கு மாவட்டதலைவர் சிக்கந்தர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புஅழைப்பாளர் மாநில பேச்சாளர் கோவை ரகமத்துல்லா,கண்டன உரையாற்றினார்.




இதில் சபியா பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்திற்கு நீதி விசாரணை செய்ய வேண்டும், அவர்களது குடும்பத்திலுள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, பொது மக்களின் முன்னிலையில் துாக்கிலிட வேண்டும், பெண் போலீஸ் அதிகாரிக்கே, பாதுக்காப்பில்லாமல் இருக்கும் அவல நிலையிலுள்ள இந்த நாட்டில், சாதாரண பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு கிடைக்கப்போகிறது. எனவே, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யும் குற்றவாளிகளை, உடனடியாக தூக்கிலிடசட்டம் நிறைவேற்ற வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.