தஞ்சாவூர்: மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட 2 பேருக்கு நவீன சிகிச்சை அளித்து அவர்களின் உயிரை காப்பாற்றி தஞ்சை காமாட்சி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதையடுத்து நலம் பெற்றவர்கள் மருத்துவக்குழுவினரை சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

தஞ்சாவூர் காமாட்சி மருத்துவமனை பொதுமக்களின் மத்தியில் மிகவும் நற்பெயரை பெற்று விளங்கி வருகிறது. தங்களை தேடி வரும் நோயாளிகளை முழுமையாக குணமடைய செய்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது இம்மருத்துவமனை என்றால் மிகையில்லை. அந்த வகையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட 2 பேருக்கு அதிநவீன சிகிச்சை அளித்து அவர்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்தி தந்துள்ளது இம்மருத்துவமனை.

இதுகுறித்து மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோஜ் சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் இழந்து சுயநினைவை அவரது பெற்றோர்களால் தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு மற்றும் இரத்தக் கட்டி உள்ளது என்பதை ஸ்கேன் பரிசோதனையில் கண்ட றிந்தார். மேலும் அந்த சிறுவன் பள்ளியில் படிப்பதால் அறுவை சிகிச்சையின்றி அச்சிறுவனை காப்பாற்ற மருத்துவருக்கு முடிவு செய்தனர்.

சிறப்பு மருத்துவக்குழுவை கொண்டு அதி நவீன கேத் லேப் அரங்கில் மூளைக்கான ஆன்ஜியோக்ராம் (MECHANICAL THROMBECTOMY) சுமார் 3  மணி நேரம் செய்து அச்சிறுவனின் உள்ள இரத்த கசிவு மற்றும் கட்டியை சாமர்த்தியமாக அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றினோம். அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 42 வயதான ஒருவருக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுஅவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்களால் உறவினர்களின் ஒப்புதலோடு ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் பரிந்துரைக்கப்பட்டது.

இவருக்கு எங்கள் குழுவை கொண்டு அதிநவீன அறுவை சிகிச்சை அரங் கில் மூளையில் உள்ள இரத்த கட்டியை அகற்றி சிறிய உலோக கிளிப் கொண்டு மூளைக்கு செல்லக்கூடிய இரத்த குழாயில் உள்ள கசிவை சாமர்த்திய மாக நிறுத்தி உயிரைக் காப்பாற்றினோம். டெல்டா மாவட்டங்களில் மூளை நரம்பியல் (மருத்துவம் & அறுவை சிகிச்சை) துறையில் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு உரிய நேரத்தில் தரமான சிகிச்சையினை மக்களுக்கு அளிப்பதை உயரிய நோக்கமாக கொண்டுள் ளது எனவும், மூளையில் ஏற்படும் இரத்த கசிவு மற்றும் பக்கவாதம் கண்ட றிந்த 3 4 மணி நேரத்திற்குள் நோயாளிகள் தங்களுக்கு அருகில் உள்ள ருத்துவமனையை அணுக வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

பேட்டியின் போது மூத்த ஆலோசகர் டாக்டர் மோகன், மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் நாராயணன் மற்றும் மருத்துவக்குழுவினர் உடனிருந்தனர்.