தஞ்சாவூர்: மற்ற பகுதி வெற்றிலைகைளை விட கும்பகோணம் வெற்றிலை மாறுபட்டு மவுசு பெற என்ன காரணம் தெரியுங்களா?

Continues below advertisement

வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது. கொடி போல படர்வது, வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வது இதனால்தான். வெற்றிலை என்று கூறுவதன் காரணத்தை தெரிந்து கொள்வோம். அனைத்து கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும். ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது. உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான்.

இதனால்தான் வெற்று இலை என்பது அதாவது  வெறும் இலை என்று கூறப்பட்டு வந்தது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது என்கிறார்கள்.  இந்த வெற்றிலை என்று சொன்னாலே சட்டென்று கும்பகோணம் வெற்றிலைதான் என்பார்கள். அந்தளவிற்கு கும்பகோணம் வெற்றிலை வெகு பேமஸ்.

Continues below advertisement

கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு என்று பல ஊர்களில் வெற்றிலை கொடிக்கால்கள் உள்ளன. வெற்றிலை சாகுபடி நடக்கிறது. அது என்ன கும்பகோணம் பகுதியில் மட்டும் வெற்றிலை அவ்வளவு பேமஸ் என்று கேட்பவர்களுக்கு வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது என்கிறார்கள்.

அதனால்தான் வெற்றிலை என்றாலே கும்பகோணம் வெற்றிலை என்கின்றனர். வெற்றிலையில் இரண்டு வகை உண்டு..... கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை. மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.

உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது. பூம்புகாருக்கு அருகே ராதாநல்லூரில் உள்ள சிவாலயத்தின்  கல்வெட்டுகளின் ஆதாரம், உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பாக்குவெட்டிகள் ஆகியவற்றை கொண்டு கிபி.10ஆம் முதல் 14 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே காவிரி படுகையில் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கத்தை உறுதி செய்துகிறது.

எனவே தான் பல நூறாண்டுகளை கடந்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடக்கூடிய இந்த வெற்றிலை கும்பகோணம் வெற்றிலை என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை மாறுபட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.