மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனைவின் உறவு மேம்பாடு அடைவதற்கு மனைவி நல விழா தனியார் மாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கணவன் - மனைவி உறவுகள் மேம்பாடு அடைவதற்கும் குடும்பங்களில் இன்னல்கள் தீர்வதற்கும் வழிவகுக்கும் வகையில் இந்நிகழ்வில் சிறப்பாக தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் குடும்பத்தை நல்வழியில் கொண்டு செல்லும் மனைவிக்கு, கணவன் மார்கள் மாலை போட்டு விட்டும் அதே போல மனைவி மார்கள் கணவனுக்கு மாலை போட்டும் உறவுகள் ஒற்றுமையாக வாழ்க்கை எளிதாக கடந்து செல்ல அன்பை பரிமாறி கொண்டனர். 




இதில் கணவர்கள், மனைவிக்கு மலர் கொடுத்து, மலர் போல மென்மையான வாழ்கையை கடந்து செல்ல வேண்டும் என மலர் அளித்தனர். அதே போல மனைவிகள், கணவனுக்கு கனி கொடுத்து கனிவாக நடந்து  கொள்வதாகவும் உறுதி மொழி கூறி கொண்டனர். தற்போதைய சூழ்நிலையில் திருமணம் நடந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் சண்டை போட்டு மறு மாதமே நீதிமன்றத்தை நாடி எளிதாக பிரிந்து செல்ல கூடிய தம்பதிகள் தான் அதிகரித்து வருகின்றனர். 


Asia Cup 2022, IND vs SL: ஆசிய கோப்பை: இலங்கை போட்டியில் களமிறங்குகிறாரா தினேஷ் கார்த்திக்? அதிரடி மாற்றங்கள்..




இதனை மாற்றும் விதமாக இவ்விழா நடைபெற்றது. இதில் இளைய வயது முதல் மூத்த வயது உடைய 25 தம்பதிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பிள்ளைகள் அனைவரும் கலந்துகொண்டு தாய், தந்தை இருவரின் உறவுகள் எவ்வாறு மேம்பாடு அடைந்துள்ளது என இந்நிகழ்வை நேரில் பார்த்து ஆச்சரியம் அடைந்து மகிழ்ச்சி அடைந்தனர்.


Cholesterol Control Fruits : கொலஸ்ட்ராலை குறைக்கும் 5 பழங்கள் இவைதான்.. இதய ஆரோக்கியம் முக்கியம் மக்களே..




மயிலாடுதுறை மாவட்டம் காளகஸ்திநாதபுரத்தில் தனியார் கல்லூரியில் புதுமைப்பெண் உறுதி திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காளகஸ்திநாதபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நேற்று காணொளி காட்சி வாயிலாக இத்திட்டத்தினை சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் செம்பனார்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி புதுமைப்பெண் உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 271 மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணை வழங்கப்பட்டது.




தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வழங்கினார். இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளும்  கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.