SIR Draft Roll Thanjavur District: தஞ்சாவூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 22,279 கண்டறிய இயலாதவர்களும், 66,842 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 1,09,241 இறந்த நபர்களும், 7,989 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 152 வாக்காளர்கள் என மொத்தம் 2,06,503 நபர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.01.2026 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்நேர்வில் 27.10.2025 ஆம் தேதியினுடைய வாக்காளர் பட்டியலானது சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 27.10.2025 ஆம் தேதியினுடைய வாக்காளர் பட்டியலின் படி வாக்காளர்கள் விவரம் பின்வருமாறு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2311 வாக்குச்சாவடிகளில், 10,18,573 ஆண் வாக்காளர்கள், 10,79,800 பெண் வாக்காளர்கள், 188 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 20,98,561 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். சட்டமன்ற தொகுதி வாரியாக திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 293 வாக்குச்சாவடிகளில் 1,33,232 ஆண் வாக்காளர்கள், 1,37,255 பெண் வாக்காளர்கள் மற்றும் 10 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,70,497 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 

Continues below advertisement

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 289 வாக்குச்சாவடிகளில் 1,33,560 ஆண் வாக்காளர்கள், 1,41,603 பெண் வாக்காளர்கள் மற்றும் 16 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,75,179 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.  பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 301 வாக்குச்சாவடிகளில் 1,31,273 ஆண் வாக்காளர்கள், 1,38,135 பெண் வாக்காளர்கள் மற்றும் 21 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,69,429 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 

திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 314 வாக்குச் சாவடிகளில் 1,34,363 ஆண் வாக்காளர்கள், 1,41,784 வாக்காளர்கள் மற்றும் 23 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,76,170 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 292 வாக்குச் சாவடிகளில் 1,34,239 ஆண் வாக்காளர்கள், 1,46,912 பெண் வாக்காளர்கள் மற்றும் 74 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,81,225 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 290 வாக்குச்சாவடிகளில் 1,22,646 ஆண் வாக்காளர்கள். 1,30,763 பெண் வாக்காளர்கள் மற்றும் 6 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,53,415 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.  

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள 272 வாக்குச்சாவடிகளில் 1,20,572 ஆண் வாக்காளர்கள், 1,30,790 பெண் வாக்காளர்கள் மற்றும் 23 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,51,385 வாக்காளர்கள் உள்ளவர். பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 250 வாக்குச்சாவடிகளில் 1,08,688 ஆண் வாக்காளர்கள் 1,12,558 பெண் வாக்காளர்கள் மற்றும் 15 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,21,261 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, 27.10.2025 ஆம் தேதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 20,98,561 வாக்காளர்களுக்கும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவமானது அச்சிடப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது. வாக்காளர்களால் நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் 14.12.2025 முடிய திரும்ப பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்ப தீவிர திருத்தம் செய்யும் பணியினை சிறப்பாக நடத்திட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை முறையாக நிரப்பி வாக்காளர்களுக்கு உதவி செய்ய 15.112025, 16.11.2025, 22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் உதவி மையம் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறப்பட்டன.

மேலும் 27.10.2025ம் தேதியினுடைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களில் கீழ்க்கண்ட எண்ணிக்கையிலான கண்டறிய இயலாத, நிரந்தரமாக குடிபெயர்ந்த, இறந்த மற்றும் இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் 9.84 சதவீதம் கண்டறியப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 22,279 கண்டறிய இயலாதவர்களும், 66,842 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 1,09,241 இறந்த நபர்களும், 7,989 இரட்டைப் பதிவுகளும், இதய இனங்களில் 152 வாக்காளர்கள் என மொத்தம் 2,06,503 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.