தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கணவருக்கு தெரியாமல் அதிக வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் ஒன்றரை பவுன் நகையை மிரட்டி வாங்கிய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Continues below advertisement

அதிக வட்டிக்கு பணம்

தஞ்சாவூர் அருகே சிங்கப்பெருமாள் குளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஷீலா (41). இவர் தனது கணவருக்கு தெரியாமல் தஞ்சாவூர் திருநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி (37), சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சுரேஷ் (37) ஆகியோரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை தனக்கு தெரிந்தவருக்கு கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடனாக வாங்கி தந்துள்ளார். அதிக வட்டிக்கு இந்த பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

நெருக்கடி கொடுத்ததால் பயம்

தொடர்ந்து வட்டிப்பணத்தை கேட்டு ஷீலாவிடம் பாக்கியலட்சுமியும், சுரேசும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் ஷீலா ஆன்லைன் வாயிலாக ரூ.2,50 லட்சம் மற்றும் நேரடியாக 6 லட்சம் ரூபாயை கடந்த ஜூலை 30ம் தேதி வரை கொடுத்தாக கூறப்படுகிறது. இருப்பினும் மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று பாக்கியலட்சுமியும், சுரேசும் மிரட்டி உள்ளனர். இதனால் ஒன்றரை பவுன் நகையையும் ஷீலா கொடுத்துள்ளார். இது போதாது மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று இருவரும் சேர்ந்து ஷீலாவை தொடர்ந்து மிரட்டி உள்ளனர். இதனால் அச்சமடைந்த ஷீலா நடந்த விஷயங்களை தனது கணவர் குமாரிடம் தெரிவித்துள்ளார்.

கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் 

தொடர்ந்து இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் ஷீலா புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியலட்சுமி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மளிகை கடையில் கடனை வைத்ததால் தகராறு

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (34). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.‌ 

இதேபோல் கீழவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (29). இவர் சிராஜுதீன் கடையில் கடனுக்கு பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடன் தொகையை திருப்பி தரவில்லையாம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி நெய்வாய்க்கால் பகுதியில் பிரதீப் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். 

அப்போது அந்த வழியாக வந்த சிராஜுதீன், பிரதீபை பார்த்து தனக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் இதில் ஆத்திரமடைந்த பிரதீப் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிராஜூதீனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிராஜூதீன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சை பலனின்றி இறந்தார்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிராஜூதீன் நேற்று உயிரிழந்தார். இதை அடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரதீபை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.