கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை திருவாரூர் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருத்த சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.  இடுபொருள் மானியமாக அப்போதைக்கு அதிமுக அரசு இழப்பீடு வழங்கிய  நிலையில், பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு தொகை பெற்று தரப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.





இந்நிலையில் கடந்த சம்பா பருவத்திற்கான பயிர் இழப்பீடு காப்பீட்டு தொகை தற்போது இஃப்கோ என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் மத்திய மாநில அரசுகளின் பங்கு தொகையையும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் காப்பீடு வழங்கியதில் கிராமத்திற்கு கிராமம் வேறுபாடு உள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தமுள்ள 1072 வருவாய் கிராமங்களில் 195 வருவாய் கிராமங்களுக்கு இழப்பீடு வெறும் பூஜ்ஜியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 195 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு ரூபாய்கூட பயிர் இழப்பீடு பெற முடியாது.




Watch Suryas' JaiBhim Trailer | சட்டம் வலுவான ஆயுதம்.. பட்டாசாக வெளியானது ஜெய் பீம் ட்ரெயிலர்..



இந்த சூழலில் இதுகுறித்து  தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை செய்தனர். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


வாட்ச்மேன் மகன் To கோடீஸ்வரன்; அடுத்த இலக்கு ஐஏஸ் அதிகாரி - 19 வயது இளைஞரின் எனர்ஜி கதை !


கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் மழைவெள்ளம் இழப்பீடு குறித்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பார்வையிட்டு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தற்போது தனியார் காப்பீட்டு நிறுவனமும் வேளாண்துறை அதிகாரிகளும் இணைந்து பெரும் மோசடியை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை பங்கிட்டு தரவில்லை என்றால் வரும் நவம்பர் 9 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் நிலவும் உரத் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Samantha In Maharishi Ashram | ”சந்நியாசிகளும், பிரம்மச்சாரினிகளும்...” மஹரிஷி மஹேஷ் யோகி ஆஸ்ரமத்துக்கு சமந்தா விசிட்..