தஞ்சாவூர்: டிட்வா புயல் ரெட் அலார்ட் காரணமாக தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்டக் கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

Continues below advertisement


இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 'டிட்வா' புயலாக நேற்று முன்தினம் உருவானது. இந்தப் புயல் வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி மழைக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.


இந்நிலையில் புயல் எச்சரிக்கை மற்றும் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 29ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.


அரியலூர் மாவட்டத்தில் இன்று (29.11.25) மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார்.


இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.