தஞ்சாவூர்: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரயில் மூலம் 4160 பேல் சாக்குகள் தஞ்சைக்கு வந்தது. அதனை லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

Continues below advertisement

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக  தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலை, உளுந்து, பயறு, சோளம், பூக்கள், காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வது வழக்கம்.

கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்து கொள்முதலும் முடிந்துள்ளது. தற்போது சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிக்காக கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாட்டால் கொள்முதல் பணிகளில் தோய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து 20,60,000 சாக்குகள் நேற்று சரக்கு ரயிலில் தஞ்சைக்கு வந்தது.

Continues below advertisement

இந்த சாக்குகள் 150 லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி என 10 தாலுகா உள்ளது. எனவே நேற்று சரக்கு ரயிலில் வந்த சாக்குகள் பிரித்து அனைத்து தாலுகாவிற்கும் அனுப்பப்பட்டது. 

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நேரங்களில் சாக்கு தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சாக்குகள் வரவழைக்கப்பட்டது. அதன்படி 4,120 பேல் சாக்குகள் நேற்று சரக்கு ரயில் தஞ்சை வந்தது. ஒரு பேல் என்பது 500 சாக்குகள் ஆகும். அதன்படி 20,60,000 சாக்குகள் நேற்று தஞ்சை வந்தது. 

அதனை லாரிகள் மூலம் சாக்குகள் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.