Thanjavur Roberry : நடந்து வந்த ஆசிரியர். தாலி செயினை பறித்த மர்மநபர்.. தஞ்சாவூரில் பரபரப்பு

Thanjavur Robbery : தஞ்சாவூரில் பைக்கில் ஹெல்மேட் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் ஆசிரியர் ஒருவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினை பறித்து சென்ற பரபரபபை ஏற்ப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர்: காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு, நடந்து சென்ற ஆசிரியையிடம் இருந்து தாலி செயின் பறிப்பு என்று தஞ்சாவூரை பரபரப்புக்கு உள்ளாகிய சம்பவங்கள் நடந்துள்ளது.

Continues below advertisement

செயின் பறிப்பு:

தஞ்சை அருகே மாதாக்கோட்டை பகுதியில் நடந்து சென்ற ஆசிரியையிடம் இருந்து 5 பவுன் தாலிச்செயினை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை காவேரி நகர் கிழக்கு கங்கா நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சாந்தி (61), ஓய்வு பெற்றவர். இந்த கல்வியாண்டுக்காக தொடர்ந்து எடமேலையூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

இவர் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு பொன்னி நகர் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் ஹெல்மேட் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் சட்டென்று சாந்தி கழுத்தி அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி திருடன், திருடன் என்று கூச்சலிட்டுள்ளார்.

எனினும் அந்த மர்மநபர் செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் சாந்தி புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு சம்பவம்:  இதே போல தஞ்சை அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை அறுத்துச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை அருகே அற்புதாபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல் என்பவரின் மனைவி அமுதராணி (42). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த போது காற்றுக்காக அமுதராணி வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று 4ம் தேதி அதிகாலை அமுதராணியின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் தூங்கிக் கொண்டிருந்த அமுதராணியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அமுதராணி அலறி கூச்சல் போட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் செயினுடன் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை பகுதியில் ஒரே நாளில் அதிகாலையில் ஒரு இடத்திலும், மாலையில் மற்றொரு இடத்திலும் பெண்களிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola