மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லாயிரக்கணக்கான தொகுப்பு வீடுகள் இடிந்து விடும் நிலையில் காணப்படுகிறது. பல்வேறு பகுதிகள் மிகவும் ஏழ்மையான மக்கள் வசிக்கும் காலணி பகுதிகளாக உள்ளன. இங்கு தொகுப்பு வீட்டின் மேற்கூரைகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த மழை பெய்யும் போது இந்த வீடுகளில் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்தும், மேற்கூரைகள் இடிந்து விழுந்தும் வருகின்றன. 




தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு காயங்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. மழை நேரத்தில் தண்ணீர் கசியாமல் தவிர்க்க தார்ப்பாய் கொண்டு மேற்கூரைகளை மூடியும், வீடுகள் சேதமடைந்து மேற்கூரை பெயர்ந்து விழுவதால் வாசலில் கீற்று கொட்டகை அமைத்தும் பொதுமக்கள் அதில் குடியிருக்கின்றனர். கனமழை பெய்யும் பொழுது உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடனே பொதுமக்கள் தொகுப்பு வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 


Share Market : சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தை...! சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை சரிவு..! முழு விவரம் உள்ளே...




மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு, கன்னிதோப்பு தெருவில் 75 தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் கன்னித்தோப்பு தெருவில் சுப்பையன் என்ற முதியவரது வீட்டின் மேற்கூரை 2 தினங்களுக்கு முன் இடிந்து விழுந்தது. மழைச்சாரல் ஏற்பட்டதால் வீட்டுக்கு பின்புறம் உள்ள கொட்டகையில் அவர் படுத்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபோன்று மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் மழைகாலங்களில் மிகுந்த சேதத்திற்குள்ளாகி ஆபத்தான நிலையில் உள்ளது.


Watch Video : செல்போனை திருப்பி கொடுக்க காக்பிட் ஜன்னலில் தொங்கிய பைலட்..! வைரலாகும் வீடியோ..




பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதினோராயிரம் வீடுகள் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டப்பட உள்ளன. உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் புதிய வீடுகள் கட்டும் முன்பு பழுதடைந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடு கட்டி தர வேண்டும் என்றும், பெரும் விபத்து ஏற்படும் முன் தமிழக அரசு வீடுகளை கட்டித்தந்து பொதுமக்கள் உயிரை காப்பாற்றி தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Ponniyin Selvan box office collection: ‘யாராவது என்னை கிள்ளுங்களேன்’ .. 50 நாளில் 500 கோடி வசூல் செய்த PS1.. ட்விட்டரில் கொண்டாடிய விக்ரம்!