மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது 50 வது நாளில் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 



அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் படமாக்கிய திரைப்படம் உலகளவில் பாராட்டை பெற்றது. சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் திருவிழா போல இப்படத்தை கொண்டாடினர்.  5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப்படம், இந்த ஆண்டு வெளியான விக்ரம் உட்பட அனைத்து தமிழ் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் முறியடித்து சாதனை படைத்து இருக்கிறது.     


 






 


நடிகர் விக்ரம் ஸ்வீட் ட்வீட் :


இந்த அசைக்கமுடியாத வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருந்த நடிகர் விக்ரம் ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார். "யாராவது என்னை கிள்ளுங்கள். இது கனவு அல்ல என்பதை யாராவது சொல்லுங்கள்..." என பொன்னியின் செல்வன் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தனது குறிப்பை போஸ்ட் செய்துள்ளார்.  


 






 


பொன்னயின் செல்வன் 2 :


இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னயின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் பாகத்தை ஏப்ரல் 28ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் முன்னணி நடிகர்களாக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயராம், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 


பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை விட சுவாரஸ்யமான கதையம்சம் இருக்கும் எனக்கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு, இராண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது. 


முன்னதாகவே படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில், இராண்டாம் பாகத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது. ஆனால், தற்போது பொன்னியின் செல்வன் இராண்டாம் பாகத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.