சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் , பயணி ஒருவரின் அலைபேசியை அவரிடம் கொடுப்பதற்காக காக்பிட்டில் இருக்கும் ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்து தொலைபேசியை வாங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் பயணி :
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் பயணி ஒருவர், லாங் பீச் விமான நிலையத்தில் உள்ள ஒரு கேட் பகுதியில் தனது தொலைபேசியை மறந்துவிட்டதால், இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் மற்றும் ஊழியர்கள் சமீபத்தில் ஒரு படி மேலே சென்று ஒரு பயணியின் மொபைல்போனை விமான நிலையத்தில் விட்டுச் சென்ற பிறகு அதை திருப்பி கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கலிபோர்னியாவில் உள்ள லாங் பீச் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணி தவறவிட்ட செல்போனை பற்றி விமான ஊழியர்களிடம் தெரிவித்த போது போர்டிங் முடிந்துவிட்டதாகவும், விமானம் புறப்பட தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விமானத்திற்கு வெளியே இருந்த ஊழியர்கள் விரைவாக ஒன்றிணைந்து மொபைல்போனை அதன் உரிமையாளரிடம் பாதுகாப்பாக திருப்பித் தருவதை உறுதி செய்தனர். சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களின் இந்த செயலை ட்விட்டரில் பதிவிட்டனர்.
காக்பிட்டில் தொங்கிய பைலட் :
அதில் "@LGBairport இல் உள்ள எங்கள் ஊழியர்கள் ஒரு வாடிக்கையாளரின் தொலைபேசியை தவறவிட்டபோது, விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தாலும் சற்றும் தயங்காமல் அதனை மீண்டும் அந்த பயணியிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. விமான நிறுவனம் பகிர்ந்த காணொளியில், விமானி ஒருவர் விமானத்தின் காக்பிட் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்தவாறு, தனது பயணி ஒருவர் தற்செயலாக விட்டுச் சென்ற தொலைபேசியை வாங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. சம்பவம் நடந்தபோது விமானம் ஏற்கனவே கலிபோர்னியாவில் உள்ள லாங் பீச் விமான நிலையத்தின் போர்டிங் கேட்டை விட்டு புறப்பட தயாராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு வினாடிகள் கொண்ட வீடியோவில் விமானி தனது கை மற்றும் மேல் உடலை காக்பிட் ஜன்னலுக்கு வெளியே இருப்பதை காட்டுகிறது. மேலும் முதல் முயற்சி தோல்வியுற்ற பிறகு, மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றிகரமாக தொலைபேசியை வாங்கினார்.
#WorldKindnessDay என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் கருணையை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச விடுமுறையான உலக கருணை தினத்தன்று இந்த வீடியோ வெளியிடப்பட்டது. ஆனால், அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ட்விட்டர் பயனர்கள் விமான நிறுவனத்தின் இந்த செயலை குறித்து, "குழுவாக ஒன்றீணைந்து வேலை செய்தால் கனவைச் செயல்படுத்தலாம்" என கருத்து தெரிவித்தனர்.