மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் பொது மக்களை நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்து குறைகளை கேட்டு மனு அளிக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் காவல் துறை கண்காணிப்பாளர் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதால் உள்ளூர் காவல் நிலையங்களில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கொண்ட பொதுமக்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்து புதன்கிழமைகளில் மனு அளித்து தீர்வு பெற்று செல்வது வழக்கம். 

Continues below advertisement




அதனை தொடர்ந்து நேற்று மயிலாடுதுறையில் காலை 11 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு காத்திருந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சை மண்டல அளவிலான காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் மற்றும் நாகை திருவாரூர் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்களை வாங்க யாரும் முன் வரவில்லை. பொதுமக்கள் காலை 10 மணி முதல் 2 மணி வரை 4 மணி நேரமாக காத்திருந்தனர்.


Trisha: மோகம் தீரும்; காதல் தீருமா? - மறைத்து வைத்த உண்மையை பகிரங்கமாக வெளிப்படுத்திய நடிகை த்ரிஷா!




அவர்களுக்கு கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் வசதி உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளும்  ஏற்படுத்தி தரப்படவில்லை என மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர். இதனால் பலர் தண்ணீர் கூட அருந்த முடியாமல் பசியுடன் வெயிலில் காத்திருந்தனர். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வந்திருந்த அம்சவல்லி என்ற எழுபது வயது மூதாட்டி வெயில் மற்றும் பசி மயக்கம் காரணமாக  இருக்கையில் அமர முடியாமல் தரையில் இறங்கி படுத்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து அங்கிருந்து ஆயுதப்படை காவலர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து கை தாங்கலாக எழுப்பி அமர வைத்தனர்.


TN RTE Admission: இன்றே முந்துங்கள்! அரசுப்பள்ளியில் மட்டுமல்ல; தனியார் பள்ளியிலும் இலவசக் கல்வி - எப்படி? முழு விவரம்!




தொடர்ந்து மதியம் 2:30 மணி அளவில் ஐஜி கார்த்திகேயன் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இது போன்ற உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றால் முன்கூட்டியே பொது மக்களுக்கு தகவல் தெரிவித்து ஒரு நாள் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு வீண் சிரமம் ஏற்படுத்தி அவர்களை அழிக்கதாகவும் மனு அளிக்க வந்தவர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.


screen lock view: லேட்டஸ்ட் ஸ்கிரீன் லாக்; ஆடியோ டூ டெக்ஸ்ட் - புது புது அப்டேட்ஸ்; வாரி இறைக்கும் வாட்ஸ் அப்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண