நடிகை த்ரிஷா தன் முதுகுப் பகுதியில் குத்தியுள்ள புதிய டாட்டூ அவரது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 


ஜோடி படத்தில் சிறிய வேடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை த்ரிஷா, லேசா லேசா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. கிட்டதட்ட 21 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் நடிகையாக மாறிப்போன த்ரிஷாவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் கடந்த 21 ஆண்டுகளில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என அனைவரோடும் ஜோடி சேர்ந்துள்ளார். அதே சமயம் தனி ஹீரோயினாகவும் பல படங்களில் அவர் கலக்கியுள்ளார். 


பிஸியாக உள்ள த்ரிஷா


லைகா நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மணிரத்னம் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், த்ரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




படக்குழுவினர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ப்ரோமோஷன் செய்து வருகிறனர். இந்த படத்தில் நடிகை த்ரிஷா குந்தவை கேர்கடரில் நடித்துள்ளார். பேரழகு என சொல்லும் அளவுக்கு அந்த கேரக்டரில் அவர் பொருந்தியுள்ளதாக முதல் பாகம் பார்த்த பலரும் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் செல்லும் இடங்கள் எல்லாம் த்ரிஷாவை “குந்தவை” என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர். 


இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின்  மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் தி ரோடு என்கிற படத்தில் கதை  நாயகியாக  திரிஷா நடித்து வருகிறார். 


த்ரிஷாவின் காதல் 


இப்படியான நிலையில்  பொதுவாக நடிகை த்ரிஷாவுக்கு டாட்டூ மீது அதிக ப்ரியம் உண்டு. அவர் தனது நெஞ்சில் நீமோ மீனையும், கையில் தனது ராசியின் சின்னத்தையும் டாட்டூவாக குத்தியுள்ளதை படங்களிலும், போட்டோக்களிலும் நாம் பார்த்திருக்கக்கூடும்.


அந்த வகையில் சினிமா மீதான காதலை வெளிப்படுத்தும் வண்ணம் தனது முதுகுப் பகுதியில் சினிமா கேமரா மற்றும் கிளாப் போர்டு ஆகியவற்றை த்ரிஷா டாட்டூவாக குத்திக் கொண்டுள்ளார். இதனை அவர் 2016 ஆம் ஆண்டே போட்டுக் கொண்டாலும் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனில் எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம் டாட்டூ வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 


கிட்டதட்ட 40 வயதை நெருங்கியுள்ள நடிகை த்ரிஷா இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார். அவர் நடிகர் ராணாவுடன் காதல் உறவில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அது திருமணத்தில் முடியவில்லை. ஆனால் இவற்றை விட சினிமா மீது தான் தனக்கு காதல் அதிகம் என்பதை டாட்டூ மூலம் த்ரிஷா நிரூபித்து உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.